சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகி இரண்டு நாட்களில் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து கொண்டாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று சென்னையில் அஜித்தின் மனைவி ஷாலினி ’தர்பார்’ படத்தை பார்த்தார். அவரை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் வரவேற்றனர். ரசிகர்களிடம் இந்த படம் குறித்து பேசும்போது ’தர்பார்’ படம் விறுவிறுப்பாக இருந்ததாக தெரிவித்தார்.
மேலும் ரஜினியுடன் தான் ’ராஜா சின்ன ரோஜா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்ததை நினைவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது