மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் ஜோவின் வெறித்தனமான ஒர்க் அவுட்… என்னவா இருக்கும்…?

மும்பையில் பிறந்து தமிழ்நாட்டு மருமகளான நடிகை ஜோதிகா 1999 ஆம் ஆண்டு எஸ். ஜே. சூர்யாவின் ‘வாலி’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே வருடத்தில் வெளியான…

Jyothika

மும்பையில் பிறந்து தமிழ்நாட்டு மருமகளான நடிகை ஜோதிகா 1999 ஆம் ஆண்டு எஸ். ஜே. சூர்யாவின் ‘வாலி’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே வருடத்தில் வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானார். நடிகர் சூர்யாவுடன் இணைத்து நடித்த இந்த முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று சொல்லலாம்.

அதன் பின்பு ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார். தனது வித்தியாசமான முக பாவனைகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி திரைப்படம் தான் அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாகும்.

அதற்கு பிறகு, 2006 ஆம் ஆண்டு தான் காதலித்த நடிகர் சூர்யாவை மணந்து கொண்டார். அதன் பின்பு தமிழ் சினிமாவில் இருந்து நீண்ட இடைவேளையை எடுத்துக் கொண்ட ஜோதிகா, 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து ‘ஜாக்பாட்’, ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து பெண்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் நடிகர்கள் அஜய் தேவ்கன், மாதவனுடன் இணைத்து ‘சைத்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அடுத்தது வாய்ப்புகள் வந்துள்ளதால் அதில் கவனம் செலுத்துவதற்காக நடிகை ஜோதிகா மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது நடிகை ஜோதிகா கடுமையான உடற்பயிற்சி செய்கின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

‘பிட்னெஸ் என்பது உடல் எடையை குறைப்பது மட்டும் அல்ல, நம் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது’ என்று நடிகை ஜோதிகா அடிக்கடி கூறுவார். நாற்பது வயதை கடந்த பிறகும் உடற்பயிற்சியில் இவர் காட்டும் ஆர்வத்தை பலரும் பாராட்டினர். இவர் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் விடியோக்கள் கூட வைரலாகி உள்ளது. வயது ஒரு காரணம் அல்ல, எந்த வயதானாலும் உடற்பயிற்சி செய்யலாம் என்பதற்காக பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.