ஏலத்திற்கு வந்த வீட்டை வாங்கினாரா சந்தானம்.. போயஸ் கார்டனில் இன்னொரு நடிகர்!

Published:

போயஸ் கார்டனில் ஏற்கனவே ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் சொந்த வீடு வைத்திருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகர் சந்தானமும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

போயஸ் கார்டனில் உள்ள வீடு ஒன்று திடீரென ஏலத்துக்கு வந்த நிலையில் அந்த வீட்டை சந்தானம் ஏலம் எடுத்துள்ளதாகவும் இதனை அடுத்து போயஸ் கார்டனில் வீடு வாங்கியிருக்கும் பட்டியலில் சந்தானமும் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது

விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் சந்தானம். தற்போது அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் அவர் காமெடி கேரக்டரில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சந்தானம் போயஸ் கார்டனில் ஏலத்திற்கு வந்த வீட்டை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார் என்றும் அவரது புதிய வீட்டிற்கு விரைவில் அவர் குடியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...