ஆனால் அருண், “நான் வட்டிக்கு வாங்கி பழக்கம் இல்லை. வேண்டும் என்றால் என்னிடம் ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது, அதை தருகிறேன்,” என்று சொல்ல, முதலில் மறுக்கும் சீதா, அதன் பிறகு வாங்கிக்கொண்டு நன்றி சொல்கிறார். “என்னுடைய குடும்பத்துக்காக தான் நான் கொடுக்கிறேன்,” என்று அருண் சொல்வதைக் கேட்டு சீதா நெகிழ்ச்சி அடைகிறாள்.
காலையில், போதை தெளிந்த முத்துவுக்கு மாறி மாறி ரவி, சுருதி, மீனா அட்வைஸ் செய்கின்றனர். “அந்த போலீஸ் என்னை வெறுப்பேற்றினார், அதனால்தான் கோபத்தில் குடித்தேன்,” என்று தன்னுடைய தவறை உணராமல் முத்து இருக்கிறார். ஒரு கட்டத்தில், மீனா பொறுமை இழந்து, “இவருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. என்னமோ செய்யுங்கள், நான் கிளம்புகிறேன்,” என்று சொல்கிறார்.
ஸ்ருதி மற்றும் ரவி, “நீங்கள் செய்ததுதான் தப்பு. மீனா உங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அதை விட்டு விடாதீர்கள்,” என்று சொல்கிறார்கள். அப்போது கூட முத்து தனது தவறை உணர்ந்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில், அருண் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த பணத்தை சீதா, மீனாவை வரவழைத்து கொடுக்கிறார். “உனக்கு ஏது இவ்வளவு பணம்?” என்று மீனா கேட்கும் போது, “என்னுடைய நண்பரிடம் வாங்கினேன்,” என்று சொல்கிறார். “எதற்காக நண்பரிடம் எல்லாம் பாஸ் வாங்குகிறாய்?” என்று மீனா கேட்கிறார்.
இருப்பினும், “பரவாயில்லை. நீ உன் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். நீ அந்த ஆர்டரை வாங்கி முன்னேற வேண்டும்,” என்று சீதா சொல்கிறாள். மீனா நெகிழ்ச்சி அடைந்து, சீதாவை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விடுகிறார்.
இந்த நிலையில், ஸ்ருதி வேலை பார்க்கும் ஹோட்டலில் இரண்டு இளைஞர்கள் வந்து, ஸ்ருதியை வம்புக்கு இழுக்கின்றனர். டபுள் மீனிங்கில் பேச ஒரு கட்டத்தில் கடுப்பாகும் ஸ்ருதி அவர்களுக்கு சூப்பில் மிளகாய் பொடியை போட்டு கொடுக்கிறார். அதை குடித்துவிட்டு அதிர்ச்சியடையும் அந்த இரண்டு இளைஞர்கள் சத்தம் போட, அப்போது ரவி மற்றும் நீத்து அங்கு வருகின்றனர். .
நடந்ததை கேள்விப்பட்டு, நீத்து, ஸ்ருதியை திட்டுகிறார். “வரும் கஸ்டமரிடம் இப்படி நடந்தால், என்னுடைய ஓட்டல் என்ன ஆவது?” என்று கேட்கிறார். அதற்காக, “கஸ்டமர் தவறான முறையில் நடந்தால், என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது,” என்று சொல்கிறாள். “வேண்டுமென்றால் நீங்கள் வேலையை விட்டு என்னை தூக்கிக் கொள்ளுங்கள். என்னால் சுயமரியாதை இல்லாமல் வேலை பார்க்க முடியாது,” என்று சொல்ல, ரவியிடம், நீத்து, ஸ்ருதியிடம் சொல்லி வையுங்கள். இனிமேல் இப்படி எல்லாம் நடக்க கூடாது,” என்று கூறுகிறார்.
இந்த நிலையில் மனோஜ் காய்ச்சலுடன் இருக்க, அவருக்கு மாத்திரை மற்றும் மருந்துகளை கொடுத்து அன்புடன் கவனித்துக் கொள்கிறார் ரோகிணி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
நாளைய எபிசோட்டில், “மனோஜ்க்கு காய்ச்சல்?” என்று தெரிந்து, “என்ன ஆச்சு?” என்று விஜயா கேட்கிறார். ரோகிணியுடன் பேசாமல் இருப்பதால் தான் காய்ச்சல் வந்திருக்கு என்று மனோஜ் சொல்ல, “காய்ச்சல்காரன் என்று பார்க்கிறேன், இல்லாவிட்டால் மூஞ்சியிலே குத்துவேன்,” என்று விஜயா சொல்வதுடன் ப்ரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.