தாரை தப்பட்டையால் தரைமட்டமான சசிகுமார்.. பாலாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்..!

Published:

இயக்குனர் பாலா தேசிய விருதை பெற்றவர் என்றாலும் ஆரம்ப காலத்தில் சில திரைப்படங்களை தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கும் வகையில் இயக்கி இருந்தார் என்பதும் அதன் பிறகு அவரது படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட நஷ்டம் அடைந்தவர்களில் ஒருவர் தான் நடிகர் சசிகுமார் என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர் பாலா ’சேது’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் அவர் திணறிய போது ஒரு சில பத்திரிகையாளர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் தான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவினர். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது மட்டுமின்றி தேசிய விருதும் கிடைத்தது.

அஜித் விஜய்க்கு இணையான புகழ்.. 2 படங்களை மிஸ் செய்ததால் படுவீழ்ச்சியடைந்த அப்பாஸ்..!

இதனை அடுத்து அவர் இயக்கி சூர்யா நடித்த ’நந்தா’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு ’பிதாமகன்’ ’நான் கடவுள்’ ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் அதன் பிறகு பாலாவின் வெற்றி என்பது கானல் நீராகவே போனது. குறிப்பாக ’பரதேசி’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கிய நிலையில் அந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு ’பிசாசு’ ’சண்டிவீரன்’ ஆகிய படங்களை தயாரித்தார்.

இந்த நிலைதான் சசிகுமார் நடித்த ’தாரை தப்பட்டை’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கினார். இந்த படத்தை சசிக்குமாரே தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

19 வயதில் சினிமா எண்ட்ரி.. 20 வயதில் காதல்.. 12 வயது மூத்தவரை திருமணம் செய்த நஸ்ரியா…!

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சசிகுமாருக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் வேண்டும் என்றே சசிக்குமாருக்கு அதிக செலவை பாலா இழுத்து விட்டதாக கூறப்பட்டது.

மதுரையிலிருந்து சினிமா வாய்ப்பு தேடி பாலாவும் சசிகுமாரும் ஒன்றாகத்தான் வந்தனர் என்பதால் தனது நண்பன் என்ற காரணத்தினால் சசிகுமார் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்தார். ஆனால் தாரை தப்பட்டை படம் மிகப்பெரிய  தோல்வி கொடுத்ததை அடுத்து சசிகுமார் பெரும் பொருளாதார நஷ்டம் அடைந்தார்.

sasikumar 1

அதற்காக அவர் வாங்கிய கடன் பல ஆண்டுகள் இருந்தது என்பதும் அந்த கடன் நெருக்கடி காரணமாக தான் அவரது மைத்துனர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

’சுப்பிரமணியபுரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் திரை உலகில் திரும்பி பார்க்க வைத்த சசிகுமார், அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக ’நாடோடிகள்’ ’போராளி’ ’சுந்தர பாண்டியன்’ ’பிரம்மன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இயக்கியும் ஓரளவு பணம் சம்பாதித்த  சசிகுமார் தாரை தப்பட்டை என்ற ஒரே படத்தின் மூலம் தனது அனைத்து பணத்தையும் இழந்தார்.

இந்த நிலையில் தற்போது தான் அவர் கடனில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பாலாவை வைத்து திரைப்படம் இயக்கியவர்கள் அனைவருமே புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பாக ’வர்மா’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கிய நிலையில் அந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்யவே வேண்டாம் என்று விக்ரம் கூறினார் என்பதும் தெரிந்ததே.

அதன் பிறகு அதே திரைப்படத்தை மீண்டும் வேறொரு இயக்குனரை வைத்து விக்ரம் இயக்க வைத்தார் என்றும் தனது மகனின் அறிமுகப்படம் என்பதால் பாலாவின் படத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

bala

ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனர் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறியது தமிழ் திரை உலகில் அதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தனது திறமையை மீண்டும் நிரூபித்து காட்டுவதற்காக தான் சூர்யா நடிப்பில் ’வணங்கான்’ என்ற திரைப்படத்தை ஆரம்பித்தார். ஆனால் அதிலும் அவரது நடவடிக்கை சரியில்லாததால் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

தற்போது அருண் விஜய் தான் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அருண் விஜய்யும் இந்த படத்தில் ஏன் கமிட் ஆனோம் என்று புலம்பும் அளவுக்கு பாலாவின் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

எம்ஜிஆரின் லட்சியப் படம் இதுதான்…! திரைக்கதை எழுதியது பிரபல டைரக்டர் ! இது மட்டும் நடந்திருந்தால் அவரது லெவலே வேற..!

மொத்தத்தில் ஒரு மிக திறமையான இயக்குனரான பாலா மீண்டும் தமிழ் திரை உலகில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அவர் தனது குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...