கணவனின் மறைவுக்கு பின் கண்களை திறக்க முடியாத சரோஜாதேவி! கன்னடத்து பைங்கிளியின் திருமண வாழ்வின் மறுபக்கம்!

Published:

முன்னணி நடிகை சரோஜாதேவியின் குடும்ப வாழ்க்கை குறித்து சுவாரசியமான பல தகவல்களை பார்க்கலாம் வாங்க.. வைரப்பா- ருத்திராமா தம்பதியினருக்கு முதல் 3 குழந்தைகளும் பெண் குழந்தைகள், நான்காவது பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து தவம் இருந்த நிலையில் நான்காவது பெண்ணாக பிறந்தார் சரோஜாதேவி.

பெண்ணாக பிறந்ததால் குடும்பத்தினர் யாருக்கும் இந்த குழந்தையை பிடிக்கவில்லை. பெற்றோர்கள் சரோஜாதேவிக்கு இட்ட பெயர் ராதா தேவி. பெங்களூரில் 9 வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பாட்டு போட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஹேமிலி என்ற இந்தி பாடலை பாடி அனைவரையும் தன் குரல் மூலம் ஆக்கிரமித்தார் சரோஜாதேவி.

அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரபல நடிகர் பாகவதர், சரோஜாதேவி குரலால் ஈர்க்கப்பட்டு உன் பெற்றோரை அழைத்துக் கொண்டு என் ஸ்டூடியோவிற்க்கு வா உன்னை பாடகியாக மாற்றுகிறேன் என அழைப்பு விடுத்துள்ளார். புத்தாடை உடுத்தி அலங்காரம் செய்து தன் பெற்றோர்களுடன் பாகவதரை சந்திக்க சென்றார் சரோஜாதேவி.

அப்போது சரோஜா தேவியை பார்த்த பாகவதர் நீ பாடுவது இருக்கட்டும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறீயா என ஆர்வத்துடன் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சரோஜா தேவியின் தந்தை மறுத்துள்ளார். பிறகு சரோஜா தேவியின் தந்தை அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்த பாகவதர்,இது காளிதாசனின் வாழ்க்கை வரலாறு கவுரவமான வேடம் என்று எடுத்து கூறி சம்மதிக்க வைத்துள்ளார் பாகவதர்.

இந்த ஒரு படத்தில் மட்டும் என் மகள் நடிப்பாள் என கூறி சம்மதித்துள்ளார் சரோஜா தேவியின் தந்தை. தமிழில் அதிக படங்களில் கல்லூரி மாணவியாக நடித்தவர் சரோஜாதேவி. அன்றைய கல்லூரி மாணவர்கள் இவர் உடுத்திய ஆடை முதல் காலணி வரை அனைத்தையும் பின்பற்றினார்கள். ஆபாசமாக இல்லாமல் குடும்பத்திற்கேற்ற அழகான கதாபாத்திரங்களில் தோன்றிய சரோஜாதேவி, அந்த கால தமிழ் பெண்களின் நடை,உடை, பாவனைகளை தீர்மானித்த மாபெரும் சக்தியாக திகழ்ந்தார்.

குள்ளமான உடல்வாகு, கவர்ச்சி சுத்தம் பிடிக்காது, தமிழ் மொழி தெரியாது இப்படி இருந்தும் அந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய கதாநாயகி என்ற பெருமையை பெற்ற சரோஜாதேவி. சேலை முதல் சுடிதார் வரை உடலை போர்த்தி கொண்டே திரையில் வருவதால் இவரை ஜீன்ஸ் போட சொல்லி பல பட முதலாளிகள் வற்புறுத்தியுள்ளார்கள்.

ஆனால் முதல் படத்தில் இருந்து கவர்ச்சியை கண்டிப்புடன் மறுத்து விட்ட சரோஜா தேவியின் தாய் ருத்ரமா சம்பள விசயத்திலும் கண்டிப்பாக இருந்துள்ளார். சரோஜாதேவி தன்னுடைய திருமண தேதியை அறிவித்த போது இவரின் தீவிர ரசிகர் ஒருவர் சரோஜா தேவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உங்களுக்கு திருமணம் நடந்து விட்டால் அதன் பிறகு நீங்கள் நடிக்க மாட்டீர்கள் இது என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

ஆதலால் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வந்து தற்கொலை செய்வேன் என்று எழுதி இருந்தாராம். அதனை தொடர்ந்து சரோஜா தேவியின் திருமணத்தின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிரமாக கண்காணித்தார்கள்.

1967 ஆம் ஆண்டு தன் பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையான ஜெர்மனியில் பணியாற்றிய ஸ்ரீ ஹர்ஷா என்ற இன்ஜினியரை திருமணம் செய்து கொண்ட சரோஜாதேவி. சரோஜாதேவி- ஸ்ரீ ஹர்ஷா திருமணம் பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பிரபலமாக நடந்தது. சரோஜா தேவியை வாழ வைத்த தெய்வம் ஆன புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவாக தன் மகனுக்கு கௌதம் ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார். அதே மாதிரி இந்திரா காந்தியின் நினைவாக அவருடைய மகளுக்கு இந்திரா என்று பெயர் சூட்டினார்.

1986 ஆம் ஆண்டு சரோஜாதேவியின் கணவர் ஸ்ரீ ஹர்ஷா இறந்த துயரம் தாங்காமல் தொடர்ந்து அழுததால் கண்ணீர் முழுவதும் வற்றி போனதோடு கண்களும் திறக்க முடியாத நிலைக்கு சென்றார் சரோஜாதேவி. இப்படி அடியோடு கண்ணீர் வற்றிப் போனால் கண் பார்வை போய்விடும் என்று கூறிய பிரபல கண் சிகிச்சை டாக்டர் உடனடியாக வெளிநாட்டிலிருந்து மருந்து ஒன்றே வரவழைத்து அதை கண்ணில் போட்டதும் கண்கள் திறந்து சரோஜாதேவிக்கு பார்வையும் வந்துள்ளது.

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழக ரசிகர்களும், சல்லாத சுந்தரி என்று தெலுங்கு ரசிகர்களும், அபிநய பாரதி என்று இந்தி ரசிகர்களும், அபிநய காஞ்சனா மாலா என்று கன்னட ரசிகர்களும் கொண்டாடிய ஒரே நடிகை சரோஜாதேவி மட்டுமே தான்.

ரஜினி பட வில்லன் நடிகர் செந்தாமரையின் ரகசிய காதல் கதை! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அறிய தகவல்கள்!

அவரின் கணவரின் மரணத்திற்கு பிறகு சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்ள ஏகப்பட்ட பேர் ஆசைப்பட்டனர். ஆனால் சரோஜாதேவி என் கணவரின் இடத்தில் இன்னொருவரை வைத்து பார்க்க முடியாது என்றும் ஆண் துணை இல்லாமல் எனது மீதி காலத்தை சிறப்பாக களிக்க முடியும் என்று துணிச்சலோடு கூறியுள்ளார்.

 

மேலும் உங்களுக்காக...