ஜோதிகாவை தொடர்ந்து மம்மூட்டிக்கு ஜோடியாக போகிறாரா சமந்தா!.. வைரலாகும் புகைப்படம்!..

Published:

மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்மூட்டி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கன்னூர் ஸ்குவாட் படத்தில் ஹீரோயினே இல்லாமல் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான காதல் தி கோர் திரைப்படத்தில் 72 வயதாகும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார்.

இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் வெளியான அந்தத் திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனாலும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு காண சரியான படமாக காதல் தி கோர் படம் உருவாக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. மம்முட்டி இந்த வயதிலும் தனது இமேஜை எல்லாம் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார் என பலரும் பாராட்டினர்.

மம்மூட்டியுடன் இணைகிறாரா சமந்தா?:

இதில் அந்த பாராட்டுக்களை அப்படியே விட்டு விடாமல் இந்த ஆண்டும் அதைவிட மிரட்டலான படத்தை சமீபத்தில் மம்மூட்டி கொடுத்துள்ளார். கொடுமன் போட்டி எனும் கதாபாத்திரத்தில் பிரமயுகம் படத்தில் பேயாக மம்மூட்டி நடித்து மிரட்டி இருக்கிறார்.

வெறும் 10 நாட்களில் அந்த படம் 50 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்து, மம்மூட்டி உடன் எந்த நடிகை ஜோடி போட்டு நடிப்பார் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது சமந்தாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது.

சமந்தா புதிதாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்த நிலையில், அடுத்ததாக மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகளை தற்போது ரசிகர்கள் அந்த போட்டோவை பார்த்து எழுப்பி வருகின்றனர்.

மம்முட்டியும் சமந்தாவும் இணைந்து நடித்த வேற லெவலில் இருக்கும் என்றும் இருவரும் திறமையான நடிகர்கள் இன்னொரு போல்டான படம் மலையாளத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். துல்கர் சல்மானுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள நிலையில், அவரது அப்பா மம்மூட்டியுடன் இணைந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிட்டாடல் வெப்சீரிஸுக்கு பிறகு சமந்தா எந்த படத்திலும் கமிட் ஆகாத நிலையில், முதன் முறையாக மலையாளத்திற்கு செல்வாரா சமந்தா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கிய சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பல பட வாய்ப்புகளையும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் சான்ஸையும் அவர் மிஸ் செய்து விட்டார்.

மேலும் உங்களுக்காக...