இந்த ப்ரோமோ இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஒருவர், “நாகார்ஜூனாவின் மனைவி கைதட்டுகிறாரே ”, என்றும், மற்றொருவர், “அமலா எப்படி பாராட்டுகிறார் ”, என்றும், மூன்றாவது ஒருவர், “அமலாவும் அந்த நிகழ்வில் இருந்தாரா?” எனக் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
சமந்தா மற்றும் நாகசைதன்யா பல ஆண்டுகள் காதலித்து, 2017-ல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அவர்கள் 2021 அக்டோபரில் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். அந்த நேரத்தில் இருவரும் தனிப்பட்ட இடைவெளிக்கு வேண்டுகோள் விடுத்து, வெவ்வேறு வழியில் செல்ல உள்ளதை உறுதிப்படுத்தினர்.
ஒரு நேர்காணலில் சமந்தா, தனது விவாகரத்துக்கு பிறகான காலத்தை “மிகவும் கடினமானது” என்று கூறியிருந்தார். “நான் ஒருவித அமைதியை உணர்ந்தேன். பல வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக நிம்மதியாக சுவாசிக்க முடிந்தது. தூங்கவும் முடிந்தது. எனது வேலையில் முழு கவனம் செலுத்தலாம் என்று நினைத்த அந்த நாளின் பிறகு தான் இந்த மையோசைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டேன்’ என்று அவர் பகிர்ந்தார்.
சமந்தா தற்போது இயக்குநர் ராஜ் என்பவரை காதலித்து வருகிறார் என்று வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் நாகசைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/DJ3uI2-spOc/