AR ரஹ்மானை பிரிவது ஏன்…? சாய்ரா பானு கொடுத்த விளக்கம்…

By Meena

Published:

தமிழ் சினிமா வட்டாரத்தையே மிகவும் அதிர்ச்சியாடைய வைத்த ஒரு செய்தி AR ரஹ்மான் விவாகரத்து விஷயம் தான். முதலில் இந்த அறிக்கையை வெளியிட்டது AR ரஹ்மான் அவர்களின் மனைவி சாய்ரா பானு தான். சாய்ராம் தனது வழக்கறிஞர் மூலமாக தனது கணவர் AR ரஹ்மான் உடனான 29 வருட திருமண பந்தத்தில் இருந்து முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.

அடுத்ததாக AR ரஹ்மான் ட்விட்டரில் இது பற்றி பதிவு போட்டதும் தான் இது உறுதியானது. இது யாருமே எதிர்பாக்காத ஒரு விஷயம் தான். ஏனென்றால் இத்தனை வருடங்களில் AR ரஹ்மான் தனது குடும்பத்தை பற்றி எல்லாரும் சப்போர்ட்டிவாக இருக்கிறார்கள் என்று தான் கூறுகிறார். தன் மனைவி எல்லா விதத்திலும் எனக்கு ஆதரவாக இருக்கிறார் என்று தான் கூறியிருக்கிறார். திடீரென்று என்னவாயிற்று என்று ரசிகர்கள் கவலை கொண்டனர்.

இந்நிலையில் இன்று AR ரஹ்மான் அவர்களின் மனைவி சாய்ரா பானு AR ரஹ்மானை பிரிவதற்கு காரணம் என்ன என்ற ஒரு விளக்கத்தை ஆடியோ மூலமாக கொடுத்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் AR ரஹ்மான் மிகவும் அற்புதமான மனிதர் உலகிலேயே சிறந்தவர் அவரைப் பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.

என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் மும்பையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை எடுத்து வருகிறேன். என் உடல் நிலை காரணமாக AR ரஹ்மானின் பணிகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் அவரை பிரிவதற்காக நான் முடிவெடுத்தேன். இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் எங்களது விவகாரத்தை பற்றி தேவையில்லாமல் அவதூறு பரப்பாதீர்கள் என்று கூறி இருக்கிறார் சாய்ரா பானு.