பிக் பாஸ் 8: திரும்பி வந்த வேகத்தில்.. பிக் பாஸையே கேள்வி கேட்ட சாச்சனா.. வீட்ல இருந்த ஒருத்தர் கூட இத கவனிக்கலயே..

By Ajith V

Published:

தமிழில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் சில எபிசோடுகள் விறுவிறுப்பாகவும், சில நேரத்தில் போர் அடிப்பது போன்றும் போய்க்கொண்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் முதல் 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளரை அனைவரும் நாமினேட் செய்து வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ் அறிவித்த விதி தான்.

அதை அறிந்ததுமே ரசிகர்கள் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி எப்படி 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை தெரிந்து கொண்டு நாமினேட் செய்ய முடியும் என்று குறிப்பிட்டு வந்தனர். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே குறைந்த வயதாக இருந்த நடிகை சாச்சனாவை பலரும் நாமினேட் செய்து வெளியே அனுப்ப அவர் கண்ணீருடன் விடை பெற்று இருந்தார்.

இந்த முடிவை பிக் பாஸ் எடுத்ததுமே பலரும் வெறுப்புகளை தங்கள் வார்த்தைகளாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வந்தனர். இப்படி இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெறாது என்றும் குறிப்பிட்டு வந்த நிலையில் சமீபத்தில் சாச்சனா சர்ப்ரைஸாக வீட்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார். பலரும் வைல்டு கார்டு மூலம் உள்ளே வருவார் என தெரிவித்து வந்த நிலையில் முதல் வாரத்தில் முடிவுக்குள்ளாகவே நடந்துள்ளது.

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் திரும்பி வந்த சாச்சனாவை பலரும் ஆனந்தத்துடன் வரவேற்றிருந்த நிலையில், இத்தனை நாட்கள் அவர் வெளியே கவனித்த போட்டியை பற்றியும் அனைவரிடமும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். ஆண்கள் அணியில் இருப்பவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது பற்றியும், பெண்கள் அணியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை சாச்சனா தெரிவித்திருந்தார்.

இதே போல மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படாத நபர் யார் என்பதும், யார் மக்கள் மத்தியில் தொடர்ந்து வைரலாக பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை பற்றியும் காஞ்சனா அனைவரிடமும் கூற தற்போது தான் பிக் பாஸ் போட்டியாளர்களும் இதில் ஒரு தெளிவுடன் இறங்கி உள்ளனர். இதற்கு மத்தியில் யார் இந்த வீட்டில் பேக்காக இருக்கிறார்கள், யார் ரியலாக இருக்கிறார்கள் என்ற டாஸ்க்கும் வந்ததால் இன்னும் அது போட்டியாளர்களிடையே ஒரு நெருப்பை பற்ற வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு சூழலில் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்ப வந்த சாச்சனா, பிக் பாஸையே எதிர்த்து ஒரு கேள்வியை கேட்டுள்ளார். “இது ஒரு தனி நபர் கேம் தான். ஆனா இப்போ, ஆண்கள் அணி, பெண்கள் அணி போட்டி தான். எனக்கு ஒரு விஷயம் மட்டும் வெளிய இருந்து நோட் பண்றப்போ சந்தேகமா இருந்துச்சு. ஆனா இது கேட்கலாமானு தெரியல.

ஏன் பிக் பாஸ் எப்போவுமே ஆண்கள் Vs பெண்கள் சொல்றாங்க. பெண்கள் Vs ஆண்கள் சொல்ல மாட்டேங்குறாங்க” என கேள்வி எழுப்புகிறார். இதனை சாச்சனா கேட்டதும் மற்ற பெண் போட்டியாளர்கள் வியந்து பார்ப்பதுடன், ‘அட, ஆமாம்ல’ என்பது போல இதுபற்றி தங்களின் அபிப்பிராயங்களையும் தெரிவித்து வருகின்றனர்.