பிக் பாஸ் 8: ரவீந்தர் போனது பெண்கள் அணிக்கும் இழப்பு தான்.. சாச்சனா சொன்ன வினோத காரணம்..

Sachana on Fatman Ravinder Eviction : பிக் பாஸ் வீட்டில் மற்ற அனைத்து போட்டியாளர்களை விட இந்த நிகழ்ச்சியை பற்றி நன்கு தெரிந்து ஒரு படி மேலே இருந்தவர் தான் ஃபேட்மேன் ரவீந்தர்.…

sachana about fatmn ravinder

Sachana on Fatman Ravinder Eviction : பிக் பாஸ் வீட்டில் மற்ற அனைத்து போட்டியாளர்களை விட இந்த நிகழ்ச்சியை பற்றி நன்கு தெரிந்து ஒரு படி மேலே இருந்தவர் தான் பேட்மேன் ரவீந்தர். ஆனால் அவரே முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்த விஷயம், பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நிறைய டாஸ்க் மட்டும் இல்லாமல் சாதாரணமான நிகழ்வுகளை கூட பற்றி எறிய வைக்கும் அளவுக்கு மாற்றி இருந்தார் ரவீந்தர்.

முந்தைய ஏழு தமிழ் பிக் பாஸ் சீசன்களையும் ரிவ்யூ செய்தவர் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் எந்த மாதிரியான ட்டத்தை உள்ளே வெளிப்படுத்துவார்கள் என அனைத்துமே தெரிந்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வரும் போதும் அதே விஷயத்தை தொடர்ந்திருந்தார். அது மட்டுமில்லாமல் பல டாஸ்க்குள், பல விஷயங்களை மிக அழகாக மாற்றிவிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த ரவீந்தர், சத்யா, ஜெஃப்ரி, அருண் என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்களை விட சிறந்தவர் தான்.

அப்படி இருந்தும் ரவீந்தர் முதல் வாரத்திலேயே வெளியேறி உள்ளது பற்றி அதிகமாக இணையத்தில் கருத்துக்கள் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு பின்னர் அங்கிருக்கும் பெண் போட்டியாளர்கள் சிலர் அவரைப் பற்றி பேசி உள்ளனர்.

ஜாக்குலின், சாச்சனா மற்றும் பவித்ரா ஆகிய மூவரும் அமர்ந்து பேட்மேன் ரவீந்தரின் எலிமினேஷன் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் ஜாக்குலின், “அவர் அரை மணி நேரம் பேசினால் அதில் மூன்று பாய்ண்டுகளை நாம் எடுத்து கண்டெண்டாக மாற்றலாம்” எனக் கூறுகிறார்.

இதன் பின்னர் பேசும் சாச்சனா, “ரவீந்தர் சென்றது ஆண்கள் அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் பெண் போட்டியாளர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை சரியாக கனித்து ஆடக் கூடியவர். இதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு கண்டெண்டை உருவாக்கி அதில் சண்டையை ஏற்படுத்தி விறுவிறுப்பை உண்டு பண்ணுவார்.

அதே போல இன்னொரு விஷயமாக பெண்கள் அணிக்கும் அவர் போனது ஒரு பெரிய இழப்பு தான். ஏனென்றால் அவரிடம் நாம் பேசும்போது நமது கேம் மற்றும் திட்டங்கள் குறித்து சில விஷயங்களை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இப்போது அவர் போனதால் அது நமக்கும் பெரிய இழப்பு தான். ஆக மொத்தத்தில் ரவீந்தர் எலிமினேட் ஆனது பிக் பாஸ் வீட்டில் அனைவருக்குமே இழப்பு” என தெரிவித்துள்ளார்.