ஆந்திர பிரதேஷ் மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாடகி எஸ் ஜானகி. இவர் சிறுவயதிலேயே நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசையை கற்றுக் கொண்டார். அதன் பிறகு சென்னைக்கு இவரது குடும்பம் குடி பெயர்ந்த நிலையில் 1957 ஆம் வருடம் தமிழ் திரையுலகில் விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
பாடகி சொன்ன ஒரே வார்த்தைக்காக தனது பல நாள் பழக்கத்தை விட்ட சிவாஜி.. என்ன விஷயம்னு தெரியுமா?
அதன் பிறகு இவரது திறமைக்கேற்ப பல வாய்ப்புகள் பல மொழிப் படங்களில் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவராகவே பாடல் எழுதியும் பாடத் துவங்கினார். இவ்வாறாக தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் பெங்காலி என 17 மொழிகளில் கிட்டத்தட்ட 50,000 பாடல்கள் வரை இவர் பாடியுள்ளார். ஆனால் இவர் அதிக பாடல் பாராடியது கன்னடத்தில் தான்.
அதோடு மௌன போராட்டம் என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசை அமைப்பாளராகவும் எஸ் ஜானகி தன்னை பதிவு செய்துள்ளார். மேலும் இவருக்கு 30க்கும் மேற்பட்ட விருதுகளும் கிடைத்துள்ளது. தமிழக அரசிடம் இருந்து கலைமாமணி விருதும் பாடகி எஸ் ஜானகி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
சும்மா மட்டம் தட்டி பேசாதீங்க..! பெத்த புள்ளைங்கள இப்படியா பேசுறது? பாடகி சின்மயி காட்டம்
இவர் எந்த அளவிற்கு திறமையான பாடகி என்றால் ஒரு படத்தில் ஒரே பாடலில் மூன்று கதாநாயகிகளுக்கு மூன்று வெவ்வேறு குரலில் மூன்று விதமாக இவர் பாடியுள்ளார். அது மகளிர் மட்டும் என்ற திரைப்படம் தான். 1994 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெளியான இந்த படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோகினி உள்ளிட்ட நடிகைகள் நடித்திருப்பார்.
இந்த படத்தில் ரேவதிக்காக மாடலாகவும் ஊர்வசிக்காக ஐயர் பாஷையிலும் ரோகிணிக்காக சென்னை பாஷையிலும் என மூன்று பேருக்கும் மூன்று விதமாக பாடி அசத்தியிருப்பார். இளையராஜா இசையமைக்க பாடல் ஆசிரியர் வாலி அவர்களின் வரிகளில் இந்த பாடல் அமைந்திருந்தது.
இது மட்டுமல்லாது ஏராளமான பாடல்களில் தனது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி தமிழ் திரையுலகை மட்டுமல்லது ஒட்டுமொத்த சினிமாவையுமே தனது குரலால் கட்டிப்போட்டவர் எஸ் ஜானகி. இன்றும் இவரது பாடல்கள் ரசிகர்கள் விரும்பி கேட்கும் ஒன்றாக தான் உள்ளது.