பாடகி சொன்ன ஒரே வார்த்தைக்காக தனது பல நாள் பழக்கத்தை விட்ட சிவாஜி!… என்ன விஷயம்னு தெரியுமா?…

சிவாஜி தமிழ் சினிமாவிம் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர். இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இவரின் திறமையினாலேயே இவர் நடிகர் திலகம் என அழைக்கப்பட்டார்.

சினிமாவை தாண்டி இவர் அரசியலிலும் ஈடுபட்டார். ஆனால் அவரால் அரசியலில் நீடித்து நிற்க முடியவில்லை. இவர் மேலும் பாசமலர், கர்ணன், வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற பல வெற்றித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அந்த காலத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நடிகர்.

வெளில சொன்னா அசிங்கமா போயிடும்… நடிப்புக்காக கே.எஸ்.ரவிகுமாரிடம் கெஞ்சிய படையப்பா பட நடிகை…

அந்த காலம் மட்டுமல்லாமல் இந்த காலத்திலும் இவரின் நடிப்பை கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனது நடிப்பினை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியவர் நடிகர் திலகம். இவர் அந்த காலத்தில் மட்டுமல்லாமல் இந்த கால நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தேவர் மகன், என் ஆசை ராசாவே போன்ற பல திரைப்படங்களின் மூலம் இவர் இந்த காலத்து நடிகர்களுடனும் ஈடுகட்டி நடித்துள்ளார். ரஜினியுடன் இவர் நடித்த படையப்பா திரைப்படம்தான் இவர் நடித்த கடைசி திரைப்படமும் கூட. இவருக்கு மிகவும் பிடித்த உணவு குயில் கறியாம். இதனை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளாராம்.

பிரகாஷ் ராஜுக்கு இப்படியொரு அந்தஸ்து கொடுத்த கேப்டன்… என்ன மனுஷன்யா விஜயகாந்த்…

ஒரு நாள் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ஒரு கூண்டில் ஏராளமான குயிலை அடைத்து வைத்துள்ளார். அப்போது மங்கேஷ்கர் இந்த குயில்கள் எதற்காக என கேட்டுள்ளார். அதற்கு சிவாஜி வேறு எதற்கு சாப்பிடதான் என கூறினாராம்.

உடனே மங்கேஷ்கர் கண்ணில் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டதாம். உடனே அவர் சுதந்திரமாக பறக்கும் பறவையை இப்படி கூண்டில் அடைத்து வைக்கலாமா என கேட்டாராம். உடனே சிவாஜி அக்கூண்டை திறந்துவிட்டாராம். அப்போது அப்பறவைகள் அங்கும் இங்கும் பறந்ததாம். லதாவும் அதர்கேற்றாற் போல் பாடல் பாடினாராம். பின் அதை கண்ட சிவாஜி அதிலிருந்து தான் குயில் கறி சாப்பிடுவதையே நிறுத்திவிட்டாராம்.

நடிச்சது பிச்சைக்காரன் வேஷம் : ஆனா கிடைச்ச புகழோ வேற லெவல்: இந்தப் பிரபலம் தான் அவர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews