இந்தப் பாட்ட அவங்க தான் பாடணும்… கண்டிஷன் போட்ட இளையராஜா : இன்றும் காதல் கானத்திற்கு பெயர் போன பாடல்!

இந்தியாவின் இசைக் குயில், தாதா சாகிப் பால்கே விருது, மூன்று தேசிய விருது, பாரத ரத்னா விருது, பிரான்ஸ் அரசின் செவாலியே விருது என விருதுகளால் அலங்கரிக்கப்பட்டு இந்தியாவின் குரலாய் ஒலித்தவர்தான் இசைக் கலைஞர் லதா மங்கேஷ்கர். இவரின் தனித்துவமான குரலுக்கு இந்தியாவே அடிமை எனலாம்.

இவ்வளவு சிறப்புப் பெற்ற லதா மங்கேஷ்கரை இசைஞானி இளையராஜா அவர்கள் தனது இசையில் சில பாடல்கள் பாட வைத்தார். அவ்வாறு உருவான பாடல்தான் கமல் நடிப்பில் உருவான சத்யா படம். இப்படத்தில் வரும் ‘வளையோசை’ பாடலுக்கு லதா மங்கேஷ்கரை அழைத்த விதம் பற்றி இளையராஜா கூறுகையில், “நான் இயற்றிய டியூனுக்கு பாடல் எழுத கவிஞர் வாலி வந்திருந்தார்.

அப்போது டியூன் என்னவென்று அவர் கேட்க சொன்னவுடன் உடனே வளையோசை என எழுத ஆரம்பித்தார். யார் பாடபோகிறார் என்று கேட்டவுடன் லதாஜி என்றேன். உடனே வாலி மொழி பிரச்சினை வருமே என்று கூற அதற்கு ஏற்றாற் போல் நீங்கள் இரட்டைக்கிளவியில் பாடல் முழுக்க இருமுறை வரும்படி எழுதித் தாருங்கள் என்று கேட்டவுடன் வாலி இயற்றிய பாடல் தான் “வளையோசை  கலகலவென கவிதைகள் படித்திடும், குளு குளு தென்றல் காற்று“ என்ற பாடல்.

பாடல் பதிவின் போது லதாஜி வரும் போது அவர் பாடலைக் கேட்டவுடன் ஷாக் ஆனார். எப்படி பாடப் போகிறேன் என்று கேட்டவுடன் எளிமையான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கிறது. எனவே பாடுவது சற்று எளிமைதான் என்று கூறிய பிறகு அவர் பாடி முடித்தார். இவ்வாறு தான் அந்தப் பாடல் உருவாகியது என இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்தப் பாடலுக்கு முதலில் எழுதிய நோட்ஸ் வேறு, பின்னர் எழுதிய நோட்ஸ்-ல் சில திருத்தங்கள் செய்து பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசை ஏற்ற இறக்கத்துடன் வாசித்ததாகவும் கூறினார் இசைஞானி.

ஒவ்வொரு பாடலும் உருவாகும்முன் ரசிகர்களிடத்தில் சென்று சேர்ந்து ஹிட் ஆக இசையமைப்பாளரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது இந்தப் பதிவின் மூலம் தெரிகிறது அல்லவா..!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews