என்னோட இலக்கு பெரிசு…! இப்போ தான் அந்தப் பாதையில போய்க்கிட்டு இருக்கேன்…! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி

By Sankar Velu

Published:

சமீபத்தில் திரைக்கு வந்த பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேற லெவலில் நடித்துக் கலக்கியிருந்தார். அவருக்குள் இருந்த நடிப்புத்திறன் அடுத்தடுத்த படங்களில் மெருகேறிக் கொண்டே வருகிறது.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகவும் கலக்கப் போகிறார். ஏற்கனவே மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக வந்து அசத்தி இருந்தார். அதனால் அவர் படங்களின் மீது அதிகமாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்போது அவர் தனது நடிப்புத் திறன் குறித்து என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

SJ Surya 1
SJ Surya

நடிகர், இசை அமைப்பாளர், இயக்குனர் என எத்தனை வேலை இருந்தாலும் அத்தனையையும் சின்சியரா செய்வேன். ஆனாலும் எனக்குப் பிடிச்சது நடிகன் தான். அதிலிருந்து அடுத்தக்கட்ட நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இதெல்லாம்.

நான் என்னவாக ஆகணும்னு நினைச்சேனோ அதுக்குக் கிட்டக் கூட நிக்கல. எனது விஷன் பெரிசு. எனது இலக்கு பெரிசு. இப்போ தான் அதோட பாதையில வந்து நிக்கிறேன். இதுவே பெருமையான விஷயம். மைல் கற்களைத் தாண்டி ஓடிக் கொண்டு இருக்கிறேன். சில நேரம் ஓடுறேன். சிலநேரம் கால் கடுக்குது. சில நேரம் இடிச்சி நிக்கிறேன். ஆனால் இலக்கின் பாதையை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கிறேன்.

எனக்கு எல்லாமே ஒர்க் அவுட்டாகிக்கிட்டு வருது. இந்த மூங்கிலைப் பார்த்து சொல்வாங்க. தண்ணீரைக் குடிச்சிக்கிட்டே இருக்குமாம். அப்படியே இருக்குமாம். திடீர்னு பார்த்தா அப்படியே வளர்ந்து நிக்குமாம்…! அப்படிப்பட்ட பிளசிங்க ஆண்டவன் எனக்குக் கொடுத்துருக்கானோ… என்னன்னு தெரில. தேடி ஓடுவோம்.

அமிதாப்பச்சன் சாரோட நடிக்கப் போயி அந்தப் படம் நின்னு கனியைப் பார்க்கவே இல்லேன்னா கூட பரவாயில்லை. கனி கிடைக்கலேன்னா கூட பரவாயில்ல. சரி. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலேன்னா கூட பரவாயில்ல.

கடிக்கலேன்னா கூட பரவாயில்லை. கனியைக் கடிச்சி, சுவைச்சி முழுங்கப் போறதுக்கு முன்னாடி நின்னு போச்சு. அப்படிப்பட்ட ஒரு படம். ஏன்னா அது என்னோட பெரிய பிளான்ல வருது. ஒரு தமிழன் இந்தியா முழுக்கப் போயி ப்ரூவ் பண்ணினான். அது என்னோட டார்கெட். அதுக்காக அஞ்சு வருஷம் போராடிருக்கேன்.

நானும் அமிதாப்பச்சன் சாரும் 10 நாள் நடிச்சி அதுக்கு அப்புறம் அந்தப் படம் நின்னுருச்சு. நின்னதும் ஊர்ல சின்னப்பசங்க தரையில உருண்டு அழுறமாதிரி நான் அழுதேன். என்னால தாங்க முடியல.

என்னடா நம்ம உழைக்கத்தானடா செய்றோம். எதுக்குடா ஆண்டவன் இந்த மாதிரி பெயின எல்லாம் கொடுக்குறான்? நான் ரொம்ப உடைஞ்சிப் போயிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் பார்த்தா ஆண்டவன் நல்ல நல்ல புராஜெக்டா கொடுக்குறான்.

பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, அப்புறம் இன்னொரு முக்கியமான படம்… ஒண்ணு சொல்வாங்க. வாழ்க்கையில் ஒரு கதவு மூடி இருக்கும்போது ஆண்டவன் இன்னொரு கதவைத் திறப்பான். ஏன்னா எனக்கு இயக்குனரா இருந்தப்போ உயர்ந்த இடத்துல வச்சான். ஆனா அது இல்ல. எனக்கு இதுல உயர்வு வேணும்னு கேட்டப்ப… போராடி முட்டி உடைஞ்சி, மண்டை உடைஞ்சி, ரத்தம் வந்து, கட்டுப்போட்டு திருப்பி ஏறி வந்து போய்க்கிட்டு இருக்குது வாழ்க்கை.

New
New

ஆரம்பத்துல நானே நடிச்சு இயக்குனது நியூ, அன்பே ஆருயிரே அப்ப அது 100 பர்சன்டேஜ் ஆடியன்ஸ் மத்தியில ரீச்சாயிட்டு. ஆனா இன்டஸ்ட்ரில இருக்குறவங்க என்ன இவன் கோமாளி மாதிரி நடிக்கிறான்னாங்க. ஆனா மற்ற டைரக்டர்கிட்ட போகும்போது பண்பட்ட நடிகரானேன். அப்ப தான் புரிஞ்சிக்கிட்டேன்.

கோச்சா இருக்குறது வேற… பிளேயரா இருக்குறது வேறன்னு… அப்படின்னா பிளேயரா இருக்குறது எப்படின்னு யோசிக்கும் போது தான் இசை, இறைவின்னு படங்கள் வந்தது. அப்படி புடிச்சித் தான் வெளியே வந்தேன். இறைவி தான் பர்ஸ்ட் அந்த கேட்ட எனக்கு ஓப்பன் பண்ணினது.