சூப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான ’தர்பார்’திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வருகிறது
முதல்நாளே ரூபாய் 34 கோடி வசூல் ஆன இந்த படம் நான்கே நாட்களில் 150 கோடி வசூல் பெற்றதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
இந்த நிலையில் நேற்று வரை இந்த படம் ரூபாய் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும் அதில் சென்னையில் மட்டும் ரூபாய் 10 கோடி வசூல் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள தர்பார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது