பாட்ஷா படத்தின் வெற்றி.. இவர்தான் முக்கிய காரணம்.. ரஜினி பகிர்ந்த தகவல்..!!

By Aadhi Devan

Published:

Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

ஷூட்டிங்கில் ரஜினி பண்ண தப்பு.. செருப்பால அடிப்பேன்னு திட்டிய பாலச்சந்தர்.. சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்..!!

இதில் ஏராளமான படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடும் ஹிட் படங்கள் ஆகும். திரையுலகில் திறமையான நடிப்பாலும் ஸ்டைலாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு வலம் வரும் இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் வருடம் திரைக்கு வந்த படம் பாட்ஷா. இந்த படம் ரஜினிகாந்த் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். இந்த படத்தில் ரகுவரன், நக்மா, விஜயகுமார், ஜனகராஜ், நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார்.

Deva

பிறந்தநாளுக்கு ரசிகர்களை சந்திக்காத ரஜினி.. இதுதான் காரணம்.. உறுதியாக எடுத்த முடிவு..!!

இந்நிலையில் இந்த படம் தயாராகி முடித்த பிறகு ரஜினிகாந்த் தேவாவை தொலைபேசியில் அழைத்து படம் நன்றாக இருக்கிறதா என கேட்டுள்ளார். அண்ணாமலை படமும் ரஜினியின் வெற்றி படம் என்பதால் அண்ணாமலை படத்தை போல் பாட்ஷா படம் வந்துவிடுமா என கேட்டுள்ளார்.

அதற்கு தேவா அண்ணாமலை படமா பாட்ஷா படம் 10 அண்ணாமலை படத்திற்கு சமம் என்று கூறியுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த ரஜினி படத்தின் முதல் காட்சியை பார்த்தபோது அசந்து போய் உள்ளார் பின்னணி இசை மிகவும் அபாரமாக இருந்துள்ளது.

அம்மா வேடமா.. இவங்களையெல்லாம் அடிச்சுக்க வேற ஆளே இல்ல..!

இப்படி மாஸாக இசையமைத்தது தேவா தான் என்பதால் இந்த படத்தின் வெற்றிக்கு தேவா முக்கிய பங்கு என நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். பாட்ஷா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 15 மாதங்கள் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.