அம்மா வேடமா.. இவங்களையெல்லாம் அடிச்சுக்க வேற ஆளே இல்ல..!

சினிமாவில் சென்டிமெண்டுகளுக்கு எப்பவும் ஒரு தனி இடம் உண்டு. எவ்வளவு கமர்சியலாகவும், பிரம்மாண்டமாகவும் எடுத்தாலும் சென்டிமெண்ட் காட்சிகள் இல்லையென்றொல் படம் கதையுடன் ஒட்டாது. ரசிகர்களுக்கும் திருப்தியைத் தராது. சென்டிமெண்ட் காட்சிகளில் காதல், துரோகம், ஏமாற்றம், தங்கை பாசம், தாய்ப் பாசம், தந்தை பாசம். தாய்மாமன் பாசம், மருமகன் பாசம், ஏன் விலங்குகள் பாசம் என பல வகைகளில் சென்டிமெண்ட்டுகளால் ஹிட் ஆன படங்கள் ஏராளம்.

இவற்றில் அம்மா சென்டிமெண்ட் படங்களுக்கு எப்பவும் தனி மவுசு உண்டு.  மக்கள் திலகம் முதல் இப்போதுள்ள ஹீரோக்கள் வரை தாய்ப்பாசத்தில் நடித்தால் ஹிட் நிச்சயம் தாய்க்குலம் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளனர்.

ஹீரோக்கள் ஓகே. ஆனால் அம்மா வேடங்களுக்கு சில நடிகைகள் மட்டுமே மனதில் நிற்கிறார்கள். கருப்பு வெள்ளை காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை ரசிகர்களைக் கவர்ந்த சில அம்மா கேரக்டர்களைப் பற்றி பார்ப்போமா…

தென்னிந்திய சினிமாவின் முதல் அம்மா என்றால் பலருக்கும் நினைவிற்கு வருவது கண்ணாம்பா தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என அன்றைய கால கட்டத்தின் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதலில் தாய் வேடத்தில் முத்திரை பதித்தவர் கண்ணம்பா. மக்களைப் பெற்ற மகராசி படத்தில் சிவாஜிக்கு இணையாகவே இருக்கும் அவரது கதாபாத்திரம்.

அடுத்ததாக எம்.வி. ராஜம்மா. பேரறிஞர் அண்ணா கதை-வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ (1949) படத்தில் அறிமுகமானார் எம்.வி.ராஜம்மா. எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவானபோது, எம்.வி.ராஜம்மா, அவர்களுக்கு அம்மாவாக நடித்தார். குடும்பத் தலைவன், தேடிவந்த மாப்பிள்ளை ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருக்கு தாயாகவும், தங்கமலை ரகசியம், பாவமன்னிப்பு, ஆலயமணி, அன்னை இல்லம், முரடன்முத்து ஆகிய படங்களில் சிவாஜிக்கு தாயாகவும் நடித்தார். குறிப்பாக, ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சத்தை நெகிழ வைத்தார்.

இந்த படம் ஓடுமா.. ரஜினிக்கு வந்த சந்தேகம்.. ரிலீசான அப்புறம் நடந்ததை பாத்து மனுஷன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாப்ல..

இதற்கடுத்து வரும் அம்மா நடிகை பண்டரிபாய். சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் கதாநாயகியாக நடித்தவர்.ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு சில ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடித்து, பின்பு அவர்களுக்கே அம்மாவாக நடித்த முதல் நடிகை அனேகமாக பண்டரிபாயாகத்தான் இருக்க முடியும். இவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்த படம் தெய்வ மகன்.

எஸ். என். லட்சுமி
1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். வறுமையில் வாடும் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் எஸ்.என். லட்சுமி.

கமலா காமேஷ்
1980-களில் அம்மா வேடத்தில் புகழ்பெற்றவராக விளங்கியவர். அலைகள் ஓய்வதில்லை, எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம், குடும்பம் ஒரு கதம்பம், பெண்மணி அவள் கண்மணி, சம்சாரம் அது மின்சாரம், அதிசயப் பிறவி உள்ளிட்ட தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அமைதியான, சாந்தமான, பாவமான அம்மான்னா அது கமலா காமேஷ் தான். இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவ்வாறாகவே இருந்தது. முகத்தில் எப்போதுமே ஒர் சோகம் இருக்கும். அலட்டல் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வழங்கிருப்பார்.

சிவாஜி குடிச்சிருக்கியான்னு கேட்டுட்டாரு.. அந்தக் காட்சியில் இதுதான் நடந்துச்சு.. தலைவாசல் விஜய் பகிர்ந்த தகவல்..!!

ஸ்ரீவித்யா

23 வயதிலேயே அம்மாவாக நடிகை என்றால் ஸ்ரீவித்யா. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகை ஜெயசுதாவிற்கு அம்மாவாக நடித்தவர் ஸ்ரீவித்யா. கண்டிப்பு காட்டும்,பாசத்தையும் கொட்டும் அம்மாவாக மட்டுமில்லாமல், பிள்ளைகளுக்கு அம்மாக்கள் நல்ல தோழியாகவும் இருக்க முடியும் என்பதை திரையில் காட்டியவர் ஸ்ரீவித்யா. ரஜினியின் அறிமுக படமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர், பதினாறு ஆண்டுகள் கழித்து, அதே ரஜினிக்கு ‘தளபதி’யில் அம்மாவாக நடித்தார். ‘காதலுக்கு மரியாதை’ படத்தில், விஜய்க்கு அம்மாவாக நடித்தது இவரது திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

மனோரமா

ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறையில், பெண்ணாக மனோரமா சாதித்தது ஏராளம். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தன் மகனின் மேற்படிப்புக்குப் பணம் கிடைக்கும் என்று தன்னைப் பொசுக்கிக்கொள்ளும் தாய், இந்தியன் திரைப்படத்தில் கணவனின் இறப்புக்காசு கேட்டு அல்லாடும் தாய், அண்ணாமலை, சின்னக்கவுண்டர், நாட்டாமையில் தாய்க்கிழவி என்று மனோரமாவின் பிற்காலம் அவருடைய நடிப்பு வேட்கைக்குப் பெருந்தீனியிடுவதாய் அமைந்தது.

சரண்யா பொன்வண்ணன்

தமிழ் சினிமாவில் அம்மாகவாக மட்டுமே நடித்தே ஒருவர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். இவரை குறிப்பிட்டு ஒரு வட்டத்தில் அடைக்க முடியாது. ஜாலியான அம்மா, பொறுப்பான அம்மா, ஏழையான அம்மா, பணக்கார அம்மா, இப்படி அடிக்கி கொண்டே போகலாம். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக இவருக்கு தேசிய விருது சிறந்த நடிகை பிரிவில் கிடைத்தது. எம்டன் மகன் மற்றும் களவாணி போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.