பவர் பாண்டி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் தனது 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றிருப்பதால் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தனுஷ் நடிகராக ஜொலித்தது மட்டுமின்றி இயக்குநராகவும் தனது வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஒரு கைதேர்ந்த கமர்ஷியல் பட இயக்குநராக தனுஷ் ராயனில் ஜொலித்திருக்கிறார். படத்தில் தனுஷுடன் முக்கியக் கதபாத்திரத்தில் முதல் பாதியில் தாதா துரையாக வருபவர் நடிகர் சரவணன்.
பருத்திவீரன் சித்தப்புவாக எப்படி ஜொலித்தாரோ அதேபோல் ராயனிலும் தாதாவாகவும், தனுஷ், எஸ்.ஜே.சூர்யாவை மிரட்டுவதிலும் தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ராயன் படம் தற்போது சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் நிலையில் நடிகர் சரவணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில், “ராயன் படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்காக நன்றி. நான் முதலில் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் தாய்மனசு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன்.
என்னோட காலை எடுக்கணும்ன்னு சொன்னாங்க.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய விக்ரம்..
தற்போது அவர் மகன் இயக்கத்தில் வில்லன் கதாபாத்திரம். இப்படி ஒரு வாய்ப்பு எந்த நடிகருக்கும் கிடைக்காது. தனுஷ் 50-வது படத்திலேயே பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். ஹாலிவுட், இந்தி படங்களில் நடிக்கிறார். கதை, பாடல் எழுதுகிறார். 100 கோடியைத் தொடும் ஹீரோவாகி விட்டார் தனுஷ்.
நடிகர் தனுஷிடம் பிரண்ட்லியாக பேசலாம். ஆனால் இயக்குநர் தனுஷிடம் அப்படிப் பேச முடியாது. அவர் இயக்குவதில் ஒரு பேய்மாதிரி வேலை செய்கிறார். பார்த்தாலே பயமாக இருக்கு. எனக்கு இதுவரை யாரும் எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தது கிடையாது. ஆனால் முதன் முறையாக நான் எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். அவரைச் சுற்றி செல்வராகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் இருந்தார்கள்.” என்றார் சரவணன்.
1994-ல் வெளிவந்த தாய்மனசு படத்தில் இடம்பெற்ற தூதுவளை இலை அரைச்சு பாடல் இன்றும் பேருந்துகளில் ஒலிக்காமல் இருப்பதில்லை. இப்படி கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஹீரோவாக நடித்த சரவணன், மீண்டும் 30 வருடங்கள் கழித்து 2014-ல் ராயன் மூலமாக தனுஷுக்கு வில்லனாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.