ரசிகர்களால் படாத பாடுபடும் ராஸ்மிகா! உண்மைய பேசுனது ஒரு தப்பா?

Published:

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராகவும் அழகான குறும்புகள் நிறைந்த நடிகை ராஷ்மிகா மந்தனாக்கு ‘நேஷனல் க்ரஷ்’ என்ற பட்டத்தை அளித்துள்ளனர்.

ராஷ்மிகா 2016 இல் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.அவர் கடைசியாக 2022ல் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்குருடன் இருமொழி வெற்றிப் படமான சீதா ராமத்தில் தோன்றினார்.

‘புஷ்பா தி ரைஸ்’ படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு அவர் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானார், மேலும் பல பாலிவுட் திட்டங்கள், பிராண்டுகள் மற்றும் விருது நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுகிறார்.

மேலும் ராஷ்மிகா தன்வசம் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக குட்பை அல்லது சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு மூலம் பாலிவுட் அறிமுகமாகிறார். தளபதி விஜய்யுடன் வாரிசு படத்திலும், ரன்பீர் கபூருடன் அனிமல் படத்திலும் நடிக்கிறார்.

வாரிசு திரைப்படம் கல்லா கட்டுமா? விஜய்யின் தலையில் இடி போல விழுந்து புது பிரச்சனை!

பிசியாக வளம் வரும் ராஷ்மிகாவிடம் சமீபத்தில் காந்தாரா படம் குறித்து கேள்வி வந்தது அதற்கு அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என கூறினார் . இது கன்னட ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகாவை வலைத்தளத்தில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.

தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்களே விமரிசித்து வருவது, ராஷ்மிகாவிற்கு கவலை அளித்து வருகிறது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment