வாரிசு திரைப்படம் கல்லா கட்டுமா? விஜய்யின் தலையில் இடி போல விழுந்த புது பிரச்சனை!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘ வாரிசு ’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.விஜய்யின் 66வது படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ் படம் தான், தெலுங்கில் டப்பிங் செய்து தான் வெளியிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு திரையுலகை சார்ந்தார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் வாரிசு தயாரிப்பாளரான தில் ராஜு, நிஜாம் மற்றும் விசாகப்பட்டினங்களில் பல நல்ல திரையரங்குகளை படத்திற்காக ஒதுக்கி வைத்துள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி ஆகியவை அதே பொங்கலுக்கு திரைக்கு வரும் படங்கள்.

வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களுக்கு ஒப்பீட்டளவில் வாரிசு அதிக திரைகளைப் பெறும் தெலுங்கு மாநிலம் முழுவதும் விநியோக அமைப்பில் தில் ராஜுவின் பிடியே இதற்குக் காரணம். அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

அஜித்தின் துணிவு படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி? போசஸ்டருடன் வெளியான தல அப்டேட்!

இந்நிலையில் பொங்கல் ரிலீஸில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும், மீதம் உள்ள தியேட்டர்கள் தான் டப்பிங் படங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இதனால் வாரிசு படத்திற்கு தெலுங்கில் குறைவான தியேட்டார்கள் கிடைப்ப போவதாகவும் அதனால் வாசல் பெரிதளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.