உங்களுக்கு சமூக அக்கறையே இல்லையா…? நீயா நானா நிகழ்ச்சியை விமர்சித்த பா ரஞ்சித்…

பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். முதல் படத்தின் மூலமாகவே…

ranjith

பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2011 ஆம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் சிறந்த இயக்குனருக்கான எடிசன் விருதையும் இப்படத்தின் மூலமாக வென்றார் பா ரஞ்சித். தொடர்ந்து கபாலி காலா என இரண்டு படங்கள் ரஜினிகாந்த் உடன் இணைந்து இயக்கி முன்னணி இயக்குனர்களுல் ஒருவராக மாறினார் பா ரஞ்சித்.

2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் போன்ற திரைப்படங்களை இயக்கினார் பா ரஞ்சித். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சேத்துமான் ஜே பேபி போன்ற திரைப்படங்களையும் தயாரித்து இருக்கிறார் பா ரஞ்சித்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா ரஞ்சித் நீயா நானா நிகழ்ச்சியை பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டும் என்ற குறிப்பிட்ட சாதியை குறிப்பிட்டு ஒருவர் பேசியிருக்கிறார். ஆனால் நீங்கள் அதை எடிட் செய்யாமல் கட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பு செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு குறைந்தபட்ச சமூக அக்கறை கூட இல்லையா என்று கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் பா ரஞ்சித்.