இந்த நிலையில் அங்க சுத்தி இங்க சுத்தி தற்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் உத்தர பிரதேச மாநில போலீசார் கடும் டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.
அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை கண்காணிக்கும் “ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்தக்ஷேத்ர அறக்கட்டளைக்கு மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக அறக்கட்டளை அதிகாரி மகேஷ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த மெயிலை அனுப்பியவரை அடையாளம் காணும் நோக்கில் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த மிரட்டல், கோவிலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மீதான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டலை தொடர்ந்து, ராமர் கோவிலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் காவல் படைகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தங்கள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில் வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முக்கியமான மதவழிபாட்டு தலங்களில் ஒன்றான இந்த ராமர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டில் 13.55 கோடி இந்தியர்கள் இந்த ராமர் கோவிலை பார்வையிட்டுள்ளனர். இது உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக மாறி, தாஜ்மஹலை ட முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.