அஜித் படத்துக்கு விஜய்யும்.. விஜய் படத்துக்கு அஜித்தும் இப்படி செய்வாங்களா?.. மிரளவிடும் ரஜினி – கமல்!

Published:

நட்புக்கு இலக்கணமாக இந்த வயதிலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் திகழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா நடிகர்கள் ஏன் தனித்தனி தீவுகளாக மாறி ரசிகர்களை எதிரிகளாகவே வைத்திருக்கின்றனர் என்கிற கேள்வி கோலிவுட்டில் பலமாக எழத்தான் செய்கிறது.

இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ

தங்கள் படத்துக்கு வசூல் வரவேண்டும் என்பதற்காகவே சுயநல எண்ணத்துடன் தான் நடிகர் விஜய்யும் அஜித்தும் இதுவரை இணைந்து படங்களை செய்வதை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை நாளை நடிகர் ரஜினிகாந்த் மாலை 5:30 மணிக்கு வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கமலுக்காக ரஜினிகாந்த்

சமீபத்தில் தனது சிஷ்யன் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 வது படத்தை இயக்குவது தனக்குத்தான் பெருமை என கமல்ஹாசன் பேசியிருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் கலந்துகொண்டு உரை மேடையில் பேசியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் புரோமோஷனுக்கு முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் வந்திருப்பது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற பிரபலங்களும்

மேலும் தெலுங்கில், இயக்குனர் ராஜமௌலி இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை வெளியிடப் போவதாகவும் பாலிவுட்டில் நடிகர் அமீர்கான் வெளியிட உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

பாலிவுட்டில் அமீர்கான் படத்தில் ஷாருக்கான், ஷாருக்கான் படத்தில் சல்மான்கான் எனக்கு முன்னணி நடிகர்கள் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் நடித்து வரும் நிலையில், கோலிவுட்டிலும் அதே போல நடிகர்கள் தனிப்பட்ட முறையில் ஒற்றுமையாக இருப்பதை போலவே சினிமாவிலும் இருந்துவிட்டால் ரசிகர்கள் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் சண்டை செய்து மாட்டார்கள் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் லால் சலாம் மற்றும் தலைவர் 170 படங்களில் நடிப்பதால் தான் கமல்ஹாசனின் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை வெளியிடுகிறார் என்றும் சில பதிவுகளை போட்டு வந்தாலும் அமீர்கான் மற்றும் ராஜமௌலி அந்த படத்தில் நடிக்கின்றனரா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பணிகளை லைகா தரப்பு தாறுமாறாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமாக போஸ்ட் கார்டு டிசைனில் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை வெளியிடுபவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு லைகா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் இளமை கால புகைப்படங்களாக இருப்பதற்கு பின்னணியில் கமல்ஹாசனின் டீ ஏஜிங் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...