ரஜினியின் ஆவேசமான மேடைப்பேச்சால் ஒரு அமைச்சரின் பதவியே பறிபோனது.. என்ன பேசினார்?

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரைப்பட விழாவில் ஆவேசமாக அரசை கண்டித்து பேச அதன் காரணமாக ஒரு அமைச்சரின் பதவியே பறிபோனது என்றால் நம்ப முடியுமா, அது தான் ‘பாட்ஷா’ திரைப்பட விழா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தின் வெள்ளி விழாவை கொண்டாட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!

இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்த விழாவில் ஒரு பார்வையாளராக தான்  ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலந்து கொள்ள விரும்பினார். அதனால் அவர் மேடையில் அமரவில்லை. ஆனால் ரஜினி மேடைக்கு வந்தவுடன் அவர், ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து வந்து மேடையில் அமர வைத்தார்.

rajinikanth

அந்த விழாவில் ரஜினி பேசியபோது ‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகி விட்டது என்று பேசினார். இந்த விழா நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இயக்குனர் மணிரத்னம் வீட்டில் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசப்பட்டது. ‘பம்பாய்’ என்ற படத்தை எடுத்ததால் அதன் சர்ச்சை காரணமாக ஒரு பிரிவினர் மணிரத்னம் மீது கோபமாக இருந்ததாகவும் அதனால் அவரது வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மணிரத்னம் வீட்டை தொடர்ந்து  மேலும் சில வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் அடுத்தடுத்து ஒரே ஆண்டில் பல வெடிகுண்டு சம்பவங்கள் நடந்தது.

இதை மனதில் வைத்து தான் ரஜினி ‘பாட்ஷா’ பட விழாவில் பேசினார். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது என்றும் அரசு இதை கவனிக்கவில்லை என்றால் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் ஆவேசமாக பேசினார். கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசுக்கு அவர் ஒரு எச்சரிக்கையாகவே பேசினார் என்று கூறலாம்.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

ரஜினி பேச பேச ஆர்.எம்.வீரப்பன் தர்ம சங்கடத்தில் இருந்தார். மேலும் இந்த விழாவில் ரஜினி கடைசியாக பேசியதும் விழா முடிந்து விட்டது என்பதால் ஆர்.எம்.வீரப்பன் பதில் கூற முடியவில்லை.

rajinikanth 2

இந்த நிலையில்தான் இந்த விழா நடந்த மறுநாள் ஆர்.எம்.வீரப்பன் அமெரிக்கா சென்றுவிட்டார். இதனை அடுத்து ரஜினியின் பேச்சை அதிமுகவினர் கடுமையாக கண்டித்தனர். ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என்றும் ரஜினிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் போஸ்டர்கள் அடித்தனர்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

பதிலுக்கு ரஜினி ரசிகர்களும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து ஆர்.எம்.வீரப்பன் திரும்பி வந்ததும், முதலில் அவருடைய இலாகா மாற்றப்பட்டது. அடுத்த ஒரு சில நாட்களில் அவருடைய அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார். அதன் பிறகுதான் ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.