பெரிய மொய்யாக வாங்கிய மொய்தீன் பாய்!.. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

By Sarath

Published:

நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்து வெளியான ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து மிகப்பெரிய அளவில் வசூலைப் பெற்றது. அப்படத்தில் அவரின் சம்பளம் சுமார் 120 கோடி என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் கேமியோ ரோலில் நடித்து வெளியாக உள்ள லால் சலாம் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் வெளியான நயந்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் நகைச்சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து நெல்சன் இயக்கிய விஜயின் பீஸ்ட் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

ரஜினிகாந்த் லால் சலாம் சம்பளம்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர்ந்து தோல்வியை அடைந்த நிலையில் ஜெயிலர் படம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார்.

லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் லால் சலாம் படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா பணியாற்றியிருக்கிறார். எனவே தன் தந்தையை அப்படத்தில் மொய்தீன் பாய் எனும் இஸ்லாமியர் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். என்னதான் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் இந்த படம் ஒரு சூப்பர் ஸ்டார் படமாக புரமோட் செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த வாரம் அலப்பறை:

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணன், அனந்திதா, செந்தில், தம்பி ராமையா, நிரோஷா என பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மும்பையில் தாதாவாக இருக்கும் ரஜினி ஒரு பிரச்னையிலிருந்து விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் காப்பாற்றுவது போல் கதை செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பள தொகை 40 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஒருமணி நேரம்தான் ரஜினிகாந்த் வருவார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கே 40 கோடி ரூபாய் சம்பளமா என கேள்விகளை எழுப்பிவருகின்றனர். மேலும் லால் சலாம் படம் பிப்ரவரி 9ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் கார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் உங்களுக்காக...