தாரை தப்பட்டை எல்லாம் ரெடியா… தலைவர் 170 படம் ஷூட்டிங் ஆரம்பம்… எங்கே நடக்குது தெரியுமா?

Published:

சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து இண்டஸ்ட்ரி ஹிட்டையும் கொடுத்து மாஸ் கிளப்பிய சூப்பர் ஸ்டார் அடுத்ததாக லைகா தயாரிப்பில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு சென்றடைந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லைக்கா தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் சொதப்பியது. அதைப்போல அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை.

சன்பிக்சர்ஸ்க்கு ஜெயிலர்

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி சன் பிக்சர்ஸ் ஹேப்பி ஆக்கிவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக, லைகாவுக்கு ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுக்க முடிவு செய்துவிட்டார் ரஜினிகாந்த்.

நடிகர் சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்னும் திரைப்படத்தை இயக்கி ஆஸ்கர் வரை சென்று பாராட்டுக்களை அள்ளிய இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 திரைப்படம் இன்று முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது.

கேரளாவில் தலைவர் 170 ஆரம்பம்

இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் லீடு ரோலில் நடிக்க உள்ளார். மேலும், நடிகைகள் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் பகத் பாசில் விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்நிலையில் அடுத்து தலைவர் 170 படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கப் போகிறாரா அல்லது ரஜினிகாந்த் டீமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பான் இந்தியா நடிகர்கள்

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதியும் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டம் காஸ்டிங் பார்த்தாலே படம் ஆயிரம் கோடியை அடிக்கும் என தாராளமாக தெரிகிறது. ஜெய் பீம் இயக்குனர் என்பதால் நல்ல தரமான படத்தை கொடுப்பார் என்கிற நம்பிக்கையும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

எனக்கு ஒரு நெல்சன் இயக்கிய சுமாரான ஜெயிலர் திரைப்படமே ரஜினிகாந்த், சிவராஜ்குமார் மற்றும் மோகன்லாலின் மாஸ் காட்சிகளால் படம் வேற லெவல் ஹிட் அடித்தது. ஞானவேல் இயக்கத்தில் திரைக்கதை மிகவும் வலுவாக இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ள நிலையில், ஜெயிலர் திரைப்படத்தை விட பெரிய அளவில் தலைவர் 170 திரைப்படம் பேசப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

திருவனந்தபுரத்தில் ரஜினிகாந்த்

நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கிளம்பிச் சென்ற நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளை யானை வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல முன்னணி மலையாள நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் இருந்து, அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செல்ல அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

மேலும் உங்களுக்காக...