ரஜினிகாந்த் நடிக்க மறுத்த கதை….. திருப்புமுனையாக அமைந்த சூப்பர் ஹிட்படம்… எந்த படம் தெரியுமா….?

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு வில்லன் மற்றும் ஹீரோவாக மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரஜினியை வைத்து படம் இயக்க இயக்குனர்களும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் தயங்கினர். சில காரணங்களால் ரஜினியை நெருங்கவே பயந்ததாகவும் கூறப்பட்டது.

அந்த நேரத்தில் தான், ரஜினியை தைரியமாக தனது படத்தில் நடிக்க வைக்க கே பாலாஜி முடிவு செய்தார். டான் என்ற இந்தி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய அவர் ரஜினியை வரச் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். ரஜினி வந்து பார்த்தபோது இந்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறினார்

billa 1

கவியரசு கண்ணதாசன் தயாரித்த ஐந்து திரைப்படங்கள்.. ஒரே ஒரு படத்தால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்..!

அப்போது ரஜினி நான் நடிக்க விரும்பவில்லை, வேறு யாரையாவது வைத்து இந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற, நான் எனக்காக கூறவில்லை உங்களுக்காக தான் கூறுகிறேன், நீங்கள் இந்த படத்தில் நடித்தால் உங்கள் சினிமா வாழ்க்கையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு கே. பாலாஜியின் வார்த்தையை தட்ட முடியாத ரஜினி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் கதை போலீசுக்கு தண்ணி காட்டிய கொள்ளை கூட்டத்தை நடத்தும் தலைவன் தான் பில்லா. திடீரென பில்லா இறந்து விட அந்த கூட்டத்தை எப்படி பிடிப்பது என்று காவல்துறை அதிகாரிக்கு அதிர்ச்சி.

billa 3

வாலியிடம் உதவியாளராக சேர முயன்ற 3 பேர்.. 3 பேர்களும் பிரபல இயக்குனர்கள் ஆன அதிசயம்..!

இதனை அடுத்து பில்லா போலவே இருக்கும் ராஜப்பா என்பவரை கண்டுபிடித்து அவரை பில்லாவாக நடிக்க வைத்து அந்த கூட்டத்தில் உள்ளவர்களின் ஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அப்போதுதான் காவல்துறை அதிகாரி திடீரென இறந்துவிட ராஜப்பா பில்லாவாகவும் இருக்க முடியாமல் ராஜப்பாவாகவும் இருக்க முடியாமல் திணறுவார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். முக்கிய கேரக்டர்களில் பாலாஜி, மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார், கண்ணதாசன் பாடல் வரிகளில் மை நேம் இஸ் பில்லா, இரவும் பகலும், வெத்தலைய போட்டேன்டி, நாட்டுக்குள்ள எனக்கொரு, நினைத்தாலே இனிக்கும் சுகமே போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது

billa 2

ஒரே கதையை இயக்கிய பாரதிராஜா, பாக்யராஜ்… இரண்டும் வெற்றி பெற்ற ஆச்சரியம்..!

கடந்த 1980 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி பல திரையரங்குகளில் இந்த படம் 25 வாரங்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. கே பாலாஜி சொன்ன மாதிரியே ரஜினிக்கு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனை அடுத்து தான் 2007 ஆம் ஆண்டு இந்த படத்தை விஷ்ணு வர்த்தனன் அஜித் நடிப்பில் ரீமேக் செய்தார்.