ஒரே கதையை இயக்கிய பாரதிராஜா, பாக்யராஜ்… இரண்டும் வெற்றி பெற்ற ஆச்சரியம்..!

ஒரு கதையை பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரும் தனித்தனியாக இயக்கினார்கள். ஒரே கதையை இருவரும் தங்களது பாணியில் வித்தியாசமாக இயக்கிய நிலையில் இரண்டுமே வெற்றி பெற்றது. அதுதான் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ மற்றும் பாக்யராஜ் இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் உருவான ‘ஆக்ரி ரஸ்தா’ என்ற திரைப்படம்.

ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்திற்கு பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுதி, பாரதிராஜா இயக்கியிருந்தார். கமல், பாக்யராஜ், பாரதிராஜா மூவரும் இணைந்த இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்திற்காக இணைந்தனர்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

கடந்த 1985ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு பாரதிராஜாவிடம் பாக்யராஜ் ஒப்படைத்து விட்டார். இது என் கதை, என் திரைக்கதை, ஆனால் நீங்கள் இதில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

oru kaidhiyin diary

இதனை அடுத்துதான் இந்த படம் உருவானது. கமல்ஹாசன், ரேவதி, ராதா, ஜனகராஜ், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. ஊடகங்களும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்தன.

இந்த நிலையில் தான் இதே படத்தை ஹிந்தியில் இயக்க வேண்டும் என்று பாக்யராஜ் முடிவு செய்தார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று அவர் முடிவு செய்து அமிதாப்பிடம் கதை சொன்னார். அமிதாப்புக்கும் கதை பிடித்து விட உடனே படப்பிடிப்பு தொடங்கியது.

அமிதாப் பச்சனிடம் இந்த படத்தை இயக்கும் முன்பே பாக்யராஜ் ‘ஒரு கைதியின் டைரி’ படத்திற்கு நான் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும் பாரதிராஜா தனது பாணியில் உருவாக்கியிருப்பார். ஆனால் இது என்னுடைய கதை, நான் என்னுடைய ஸ்டைலில் தான் எடுப்பேன் என் குருநாதர் பாரதிராஜா ஸ்டைலில் எடுக்க மாட்டேன் என்று நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனைக்கு அமிதாப் பச்சன் ஒப்புக்கொண்டார்.

முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!

இதனை அடுத்துதான் அமிதாப் பச்சன், ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவானது. ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்திற்கும் ‘ஆக்ரி ரஸ்தா’ திரைப்படத்திற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முதல் கட்டமாக அப்பா கமல் மற்றும் மகன் கமல் ஆகிய இருவரும் ஒரு கல்லறையில் சந்திக்கும் காட்சி ஹிந்தியில் இருந்தது. ஆனால் தமிழில் இந்த காட்சி இல்லை.

akhree Raasta

அதேபோல் ஹீரோ அமிதாப் ஆங்கிலத்தில் புலமை இல்லாமல் இருப்பார். அவருக்கு திருமணமானவுடன் அவருடைய மனைவி ஆங்கிலம் கற்றுக் கொடுப்பார். இந்த காட்சிகள் தமிழில் இருந்தாலும், ஆனால் அதன் பிறகு ஹீரோயின் இறந்தவுடன் தான் ஆங்கிலத்தில் புலமை பெற்று விட்டேன் என்பதை நிரூபிப்பதற்காக தனது மனைவியின் கல்லறையில் அவர் ஆங்கிலம் பேசுவார். இந்த காட்சி தமிழில் இல்லை என்ற நிலையில் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் கிளைமாக்ஸ் காட்சி இரண்டு படத்திலும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். தமிழில் சிவாஜி சிலை போன்று அசையாமல் கமல் உட்கார்ந்து இருப்பார். அப்போது கமல் வில்லனை கொல்வார். ஆனால் ஹிந்தியில் இதை பாக்யராஜ் வேறுவிதமாக எடுத்தார். இந்த கிளைமாக்ஸ் வேண்டாம் தமிழில் இருப்பது போலவே எடுத்து விடுங்கள் என்று அமிதாப் பச்சன் கூறியதை பாக்யராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் கிளைமாக்ஸ் எடுத்து தருகிறேன், நீங்கள் பாருங்கள், ஒருவேளை நான் எடுத்த கிளைமாக்ஸ் நன்றாக இல்லை என்றால் அதன் பிறகு உங்களுக்கு தமிழில் உள்ள கிளைமாக்ஸ் எடுத்து தருகிறேன் என்று பாக்யராஜ் கூறினார். இதற்கு அமிதாப்பச்சன் ஒப்புக்கொண்டார்.பாக்யராஜ் எடுத்த கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து அமிதாப் பச்சன் திருப்தி அடைந்து இதுவே இருக்கட்டும் என்று கூறியதை அடுத்து தான் இந்த படம் வெளியானது.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த படம் வெளியானது. தமிழைப் போலவே ஹிந்தியில் நல்ல வெற்றி பெற்றது. அமிதாப் பச்சனுக்கு இந்த படத்தால் ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் உயர்ந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews