இந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு செட் ஆகாது.. கணித்து சொன்ன நடிகர்.. மாற்ற மறுத்ததால் தோல்வி அடைந்த படம்..!

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஒரு திரைப்படத்தை பார்த்த நடிகர் ஒருவர் ரஜினியின் இந்த படத்திற்கு இந்த கிளைமாக்ஸ் செட்டாகாது உடனடியாக கிளைமாக்ஸை மாற்றுங்கள் என்று சொன்னார். ரஜினியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இயக்குனர் பிடிவாதமாக மாற்ற மறுத்ததை அடுத்து அந்த படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அந்த படம் தான் மகேந்திரன் இயக்கிய ‘கை கொடுக்கும் கை’.

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம்தான் ‘கைகொடுக்கும் கை’. இந்த படம் ஏற்கனவே கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் உரிமையை ஜீவி வாங்கி அதை தமிழில் தயாரித்தார்.

தமன்னாவா இப்படி.. ரஜினியே நினைச்சிருக்க மாட்டாரு… நெல்சன் சார் என்ன இதெல்லாம் !

இந்த படத்தின் தயாரிப்பு மேனேஜராக நடிகர் விஜயகுமார் இருந்தார். ஏற்கனவே சிவாஜிகணேசன் நடித்த சொந்தங்கள் என்ற திரைப்படத்தை விஜயகுமார் தயாரித்து இருந்ததால் தயாரிப்பு பணிகள் குறித்து அவருக்கு தெரியும் என்பதால் ஜீவி அவரை தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியமர்த்தினார்.

kai kodukkum kai

கன்னடத்தில் உள்ள கதையை போன்ற தமிழிலும் படமாக்கப்பட்டது. கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் மனைவியாக நடித்த ரேவதியை வில்லன் கற்பழித்து விடுவது போன்றும் அதன் பிறகு ரேவதியிடம் ‘இதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை, எனவே உன்னை நான் ஏற்றுக்கொள்கிறேன் இதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடு’ என்று ரஜினி கூறுவதாக படம் முடிந்திருக்கும்.

இந்த கிளைமாக்ஸ் காட்சியை கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கதாநாயகிக்கு ஒரு பிரச்சனை என்றால் ரஜினி வந்து அவரை காப்பாற்றும் வகையில் கதை இருந்தால் தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் எனவே இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றுங்கள் என்றும் விஜயகுமார் கூறினார்.

ஆனால் இயக்குனர் மகேந்திரன் அதை மாற்ற முடியாது என்று கூறிவிட்டார். கன்னடத்தில் இவ்வாறு தான் கதை இருக்கிறது, அங்கு நன்றாக ஓடியது, தமிழிலும் புதுமையான கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

இதனை அடுத்து விஜயகுமார், ரஜினியிடம் சென்று இந்த கிளைமாக்ஸ் உங்களுக்கு செட்டாகாது, தயவுசெய்து மாற்றுங்கள் இல்லாவிட்டால் படம் தோல்வி அடைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

ரஜினியும் நீங்கள் சொன்ன மாதிரியே கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி விடுவோம் என்று உறுதி அளித்து இருந்தார். ஆனால் ரஜினி, மகேந்திரனை பார்த்து பேசுவதற்குள் படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்றும் இனிமேல் மாற்ற முடியாது என்றும் மகேந்திரன் கூறிவிட்டதாக தெரிகிறது.

kai kodukkum kai1

இதனை அடுத்து தான் அதே கிளைமாக்ஸுடன் படம் வெளியானது. விஜயகுமார் கணித்தது போலவே கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் ரசிக்கவில்லை. இப்படி ஒரு கிளைமாக்ஸை ரஜினி ரசிகர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தின் ஒரிஜினல் படமான கன்னட படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருப்பார். ஆனால் தமிழில் இந்த படம் வெளியான 1984 காலகட்டத்தில் ரஜினி சூப்பர் ஸ்டாராக பல ஆக்சன் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது இமேஜ் அப்போது உச்சத்தில் இருந்தது. இப்படி ஒரு நேரத்தில் ரஜினிக்கு இந்த படம் வந்தது தவறு என்று பலர் கணித்தனர்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

ஒருவேளை தப்பு தாளங்கள், முள்ளும் மலரும் போன்ற படங்கள் வந்தபோது இந்த படம் வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் என்றும், ரஜினி சூப்பர் ஸ்டாராக மாறிய பின்னர் இந்த படத்தின் கிளைமாக்ஸை மாற்றாமல் ரிலீஸ் செய்தது மிகப்பெரிய தவறு என்றும், அதன் பின்னர் மகேந்திரன் உட்பட படக்குழுவினர்களே இதனை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.