அட! இதில் இத்தனை நன்மைகளா?? மருதாணியின் மகத்துவம் நிறைந்த மருத்துவ பயன்கள்…!

மருதாணி என்றால் பலருக்கும் பலவிதமான நினைவுகள் வரும். திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற விசேஷங்களில் கிராமங்களில் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மருதாணி இலை பறித்து அதனை அம்மியில் அரைத்து கைகளில் வைத்துக் கொள்வர். இந்த மருதாணி கைகளில் அழகாக சிவந்து நீண்ட நாட்களுக்கு நிலைத்து கைகளில் இருக்கும். பலரது திருமணங்களில் மருதாணி வைத்தல் ஒரு சடங்காகவே செய்யப்படுகிறது.

istockphoto 1341409072 612x612 1

இதன் சிவந்த நிறமும் வாசனையும் பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த மருதாணியை கையில் வைப்பது வெறும் அழகுக்காக மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. குறிப்பாக கூந்தலுக்கும் அதிக நன்மைகளை தரக்கூடியது எந்த மருதாணி.

இந்த மருதாணி செடியில் உள்ள பல மகத்தான மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம்.

istockphoto 1083219808 612x612 1

1. பண்டைய காலத்தில் இருந்தே மருதாணி இலை கூந்தலுக்கு இயற்கையான நிறமூட்டியாக செயல்பட்டது. மருதாணி பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்க கூடியது. மருதாணியை கூந்தலுக்கு பயன்படுத்தும் பொழுது பொடுகு தொல்லையிலிருந்து விடுபடும் மேலும் இளநரை ஏற்படாமல் காத்திடும்.

உங்கள் கூந்தல் நல்லா ஆரோக்கியமா வளரணுமா? அப்போ இந்த எண்ணெயை உடனே தயாரிங்க!

2. கூந்தல் உடைவதை மருதாணி தடுத்து விடுகிறது. இதில் புரதம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருப்பதால் கூந்தலுக்கு வலிமை அளிக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ கூந்தலை மிருதுவாக்குகிறது.

3. கூந்தல் உதிர்தல் மற்றும் வழுக்கை அடைதல் போன்றவற்றை இருந்து காத்திட மருதாணி சாறு அல்லது மருதாணி எண்ணெய் பெரிய அளவில் உதவி புரிகிறது.

istockphoto 899805922 612x612 1

4. விரல்களின் நகங்களில் மருதாணியை வைத்துக் கொள்ளும் பொழுது ஆரோக்கியமான நகங்களை பெற முடியும். நகக்கணுக்கள் மற்றும் நகங்களின் இடுக்குகளில் அதிக அளவிலான பூஞ்சை தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு அதிகம். மருதாணி இவ்விதமான தொற்றுக்களில் இருந்து பாதுகாத்திடும் மேலும் நகங்களை எளிதில் உடையாமல் வலிமையுடன் வைத்திருக்கும்.

5. மருதாணி எண்ணெயை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி  சருமம் முதுமை அடைவதில் இருந்து பாதுகாத்திடுகிறது. மேலும் சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கருமைகள் மறைந்திடவும் மருதாணி எண்ணெய் உதவி புரிகிறது.

istockphoto 621106554 612x612 1

6. மருதாணி உடலில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி குளிர்ச்சி அடைய செய்யக்கூடிய தன்மை உடையது. மேலும் இது காயங்கள் வெட்டுக்கள் போன்றவற்றை சரி செய்யும் ஆற்றலும் உடையது. பழங்காலத்தில் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி மருதாணி பல காயங்களை சரி செய்திட உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

istockphoto 465906389 612x612 1

7. மருதாணி தூக்கமின்மையை சரி செய்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. சில துளி மருதாணி எண்ணெய் தினமும் பயன்படுத்தினாலே போதும் தூக்கமின்மையை சரி செய்து ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.

8. மருதாணி செடியின் குச்சி அல்லது இலைகளை நீரில் போட்டு அந்த நீரை பருகினால் உடலில் உள்ள விஷத்தன்மையை சரி செய்து டிடாக்ஸிஃபை செய்யும் ஆற்றல் மருதாணிக்கு உண்டு.