ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

Published:

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் தெலுங்கு திரை உலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் தற்போது இரு திரையுலகிலும் சூப்பர் ஸ்டாராக உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்கள்ம்என்பதும் பலருக்கும் ஆச்சரியமான தகவலாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

மொத்தமே 12 படங்கள் தான்.. தமிழ் திரையுலகின் உதிராப்பூ ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன்..!

rajinikanth chiranjeevi1 1

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம். முதலாவதாக கடந்த 1980ஆம் ஆண்டு ஐ.வி.சசி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான காளி என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். சினிமாஸ்கோப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

ரஜினி மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் கல்லூரியில் பயின்று கம்பெனி கம்பெனியாக வாய்ப்பு கேட்டவர்கள் என்பதால் இருவருக்குமே நல்ல நட்பு உண்டு. அப்போது தான் ‘காளி’ என்ற படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவான நிலையில் தெலுங்கில் மட்டும் ரஜினி, சிரஞ்சீவி இணைந்து நடித்திருப்பார்கள். தமிழில் சிரஞ்சீவி கேரக்டரில் விஜயகுமார் நடித்திருப்பார்.

காளி திரைப்படத்தில் சீமா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஒருவர் குடும்பப் பெண்ணாகவும் இன்னொருவர் நவநாகரீக பெண்ணாகவும் நடித்திருப்பார். காளி ஒரு வழக்கமான பழிவாங்கும் திரைப்படமாக அமைந்தது. ரஜினியின் சகோதரி வெண்ணிற ஆடை நிர்மலாவின் குழந்தைகளை வில்லன் ஆட்கள் அவமானப்படுத்த, அவர்களில் ஒருவரை ரஜினி கொன்றுவிடுவார்.

rajinikanth chiranjeevi3 1

இதனால் சிறைக்குச் செல்லும் ரஜினி திரும்பி வந்தபோது தன்னுடைய சகோதரி குழந்தைகள் வில்லனால் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து வில்லனை பழி வாங்குவது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. சென்னையில் 50 நாட்கள் ஓடியது.

அஜித் – சிவாஜி நடிக்க இருந்த படம்.. துரோகம் செய்ய விரும்பாததால் இயக்க மறுத்த இயக்குனர்..!

இதனை அடுத்து ரஜினி மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ராணுவ வீரன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி ராணுவ வீரனாகவும் சிரஞ்சீவி பயங்கர கொள்ளைக்காரனாகவும் மாறிவிட இருவரும் எதிர் எதிரெதிர் துருவங்களாக மாறி மோத வேண்டிய சூழ்நிலையில் இறுதியில் சிரஞ்சீவி இறந்து போவார் என்பது தான் கதை.

காளி போலவே ராணுவ வீரன் படமும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. எனவே இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்த இரண்டு படமுமே தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த், அமலா நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்திலும் சிரஞ்சீவி ஒரே ஒரு சண்டை காட்சியில் மட்டும் நடித்திருப்பார். ரஜினி மற்றும் அமலாவுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அந்த திருமணத்தை நிறுத்த வில்லன் ஆட்கள் வருவார்கள். அப்போது ரஜினியின் நண்பராக வரும் சிரஞ்சீவி திருமணத்தை நிறுத்த வந்த வில்லன் ஆட்களை அடித்து உதைத்து வெளியேற்றும் காட்சியில் நடித்திருப்பார்.

இந்த படத்தை சிரஞ்சீவியின் உறவினர்தான் தயாரித்திருந்தார். ஏற்கனவே இந்த படம் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக்காகும்.

பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!

இந்த படத்தில் ரஜினியின் மாமியாராக ஸ்ரீவித்யா நடித்திருப்பார். இந்த கேரக்டருக்கு முதலில் வைஜெயந்திமாலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அவர் நடிக்க முடியாது என்று கூறியதை அடுத்து ஸ்ரீவித்யா இந்த கேரக்டரில் நடித்ததாகவும் கூறப்பட்டது. ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஸ்ரீவித்யா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் அவர் ரஜினிக்கு மாமியாராக நடிக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் உங்களுக்காக...