தம்பி சூர்யாவுக்கு.. கங்குவா ரிலீசை மாற்றி வெச்சதுக்காக ரஜினி சொன்ன வார்த்தை..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முதல் பாதியில் மிகக் குறைவான பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களே வெளியாகி இருந்தது. ஒரு சில மாதங்கள் அதிக திரைப்படங்கள் இல்லாமலேயே இருந்ததால் தமிழ் சினிமாவின் நிலைமை வெறிச்சோடி தான் இருந்தது..

ஆனால் அதன் பின்னர் தற்போது தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்கள் இந்த ஆண்டு இறுதி வரை வெளியாக உள்ளதால் சிறிய திரைப்படங்களுக்கான சிக்கலும் உருவாகி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 வெளியாகி இருந்த நிலையில் இதனைத் தொடர்ந்து தனுஷின் ராயன், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி இருந்தது.

இன்னும் 3 தினங்களில் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கோட் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படமும் வெளியாக உள்ளது. இதன் பின்னர் தீபாவளி விருந்தாக சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

முன்னதாக அக்டோபர் பத்தாம் தேதி சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மிக மிக வித்தியாசமான கதைக்களத்தை சூர்யா தேர்ந்தெடுத்து நடித்துள்ள நிலையில் இயக்குனர் சிவாவும் முதல் முறையாக தனது கமர்சியல் பாணியைத் தாண்டி வித்தியாசமான ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் சிவாவால் இப்படி ஒரு திரைப்படத்தை பிரம்மாண்டமாக செய்துவிட முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் கங்குவா படத்தின் டிரைலரை பார்த்த பின்னர் நிச்சயம் படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது.

அந்த அளவுக்கு கங்குவா படத்தின் மேக்கிங் மிக பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் சூழலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம், அதே நாளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது கங்குவா திரைப்படம் பின்வாங்கும் என்பதும் உறுதியாக உள்ளது.

கங்குவா படம் அதிக பொருட்செல்வில் எடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் தனியாக வெளியாகும் பட்சத்தில் தான் அதிக வசூலை எட்ட முடியும். இதனால் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர், ரஜினி சீனியர் நடிகர் என்பதால் அவருடன் கங்குவா திரைப்படத்தை ரிலீஸ் செய்யவில்லை என்றும் நிச்சயமாக ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சூர்யா ரசிகர்கள் இந்த முடிவால் அதிருப்தியானாலும் நிச்சயம் கங்குவா படம் எப்போது வெளியானாலும் தனியாக பேசப்பட வேண்டும் என்றால், இன்னொரு ரிலீஸ் தேதி தான் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் சூர்யா தனது திரைப்படத்தை வேட்டையன் ப்படத்திற்காக தேதி மாற்றி ரிலீஸ் செய்ய இருப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“சூர்யாவின் அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றி. அவரது கங்குவா திரைப்படம் நிச்சயம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும்” என வாழ்த்துக்களை கூறி உள்ளார்.