கோட் ஸ்க்ரிப்ட் ரஜினிக்காக எழுதுனதா.. கூடவே இவருக்காகவும்.. அப்பா – மகன் காம்போவில் நடிக்க இருந்த இருவர்..

Published:

ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சமயத்தில் மிக முக்கியமான உச்சக்கட்ட எதிர்பார்ப்பை எட்டி உள்ள திரைப்படம் தான் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்த திரைப்படமான கோட் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் இருப்பதாக தெரியும் நிலையில் அவருடன் சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், யோகி பாபு, அஜ்மல் என பலரும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த காம்போ மீது மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் இருந்தனர்.

கடைசியில் வெங்கட் பிரபுவின் படங்கள் பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்காததால் விஜய்க்கு எப்படி அவர் சிறந்த படத்தை இயக்குவார் என்றும் கேள்விகள் வலம் வந்தது. அதை இன்னும் நிஜமாக்கும் வகையில் பின்னர் வந்த பாடல்கள் கூட பெரிய அளவில் ரசிகர்கள் மனதை கவரவில்லை. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான ஸ்பார்க், விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் உள்ளிட்ட பாடல்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

இதனால் கோட் படத்தின் மீதான ஹைப்பும் குறைவாக இருக்க அப்போது வெளியான டிரைலர் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. ட்ரெய்லரில் வரும் காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் கவர அதன் பின்னர் கோட் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக வெங்கட் பிரபு, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கொடுத்து வரும் நேர்காணல்களும் கோட் படத்தில் என்ன தான் இருக்கிறது என்ற ஆவலையும் உருவாக்கி விட்டது.

அந்த வகையில், சமீபத்தில் பேசியிருந்த அர்ச்சனா கல்பாத்தி, கோட் படத்திற்கு வேண்டும் என்றுதான் ஹைப்பை கொடுக்காமல் இருந்தோம் என்றும் அப்படி கொடுத்துக் கொண்டே இருந்தால் பட ரிலீஸ் நேரத்தில் அது குறைந்து போய்விடும் என்று தெரிவித்திருந்தார்.

அவர் கூறியது போலவே ஆரம்பத்தில் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாத சூழலில் தற்போது அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். கோட் திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்து வரும் பல்வேறு கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை தூண்ட இந்த படத்தின் ஸ்கிரிப்ட் யாருக்காக எழுதியது என்ற தகவல் தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கோட் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடிக்க இதில் முதலில் ரஜினி மற்றும் தனுஷ் ஆகியோரை வெங்கட் பிரபு நடிக்க முயற்சி செய்து மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோட் ஸ்க்ரிப்ட்டை அவர்கள் இருவரையும் மனதில் வைத்து எழுதியதாகவும் பின்னர் சில காரணங்களால் விஜய்க்கு கதையை சொல்லி அவரை நடிக்க வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் உங்களுக்காக...