ரஜினி நடித்த கேரக்டரில் எஸ்.வி.சேகர்.. துணிச்சலாக ரீமேக் செய்த விசு..!

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கேரக்டரில் எஸ்.வி.சேகரை நடிக்க வைத்து, அந்த படத்தையும் வெற்றிப்படமாகியவர்தான் இயக்குனர் விசு தான்.

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விசு, அவரது திரைக்கதை வசனம் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கும். அவரது படங்கள் நாடகத்தனமாக இருப்பதாக சிலர் விமர்சனம் செய்தாலும் அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

மழலைப் பட்டாளம்: நடிகை லட்சுமி இயக்கிய ஒரே படம்.. உதவிய பாலசந்தர்-விசு..!

கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்கம்’ என்ற திரைப்படத்தை தான் 1990ஆம் ஆண்டு வெளியான ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற திரைப்படமாக ரீமேக் செய்தார்.

சதுரங்கம் என்ற திரைப்படத்திற்கு விசு தான் கதை, வசனம் எழுதினார். தயாரிப்பாளர் நடராஜன் திரைக்கதை எழுத, இயக்குனர் துரை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பசி என்ற படத்தை இயக்கியவர்.

sathurangam

இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஜெயசித்ரா, பிரமிளா உள்ளிட்ட பலர் நடித்தனர். 1978ஆம் ஆண்டு வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீகாந்த், அண்ணன் தம்பியாக இருக்க, ரஜினிக்கு ஜோடியாக பிரமிளாவும், ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ஜெயசித்ராவும் நடித்தார்கள்.

அட்டர் பிளாப் ஆன படத்தை மீண்டும் எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட்டாக்கிய விசு.. என்ன படம் தெரியுமா?

இந்த படத்தில் ரஜினி நல்லவராகவும் நியாயமானவராகவும் இருப்பார். ஆனால் அவருடைய மனைவி பிரமிளா பணத்தாசை பிடித்தவர் என்பதால் அவர் கொடுக்கும் டார்ச்சர் காரணமாக வேறு வழி இன்றி லஞ்சம் வாங்கி ஆடம்பர வாழ்க்கையை வாழ்வார்.

ஆனால் ஸ்ரீகாந்த் கல்லூரி காலத்தில் அடாவடியாக இருந்தாலும் ஜெயசித்ராவை திருமணம் செய்த பின் ஒழுக்கமாக வாழ்வார், உழைத்து முன்னேறுவார், பலராலும் நல்லவன் என்று பாராட்டப்பட்ட ரஜினி கடைசியில் லஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு செல்வார். ஆனால் கல்லூரி காலத்தில் கெட்டவர் என்று விமர்சனம் செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நல்லவராக இருப்பார். இதுதான் சதுரங்கம் படத்தின் கதை.

thirumathi

இந்த கதையைதான் அப்படியே ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படமாக இயக்குனர் விசு ரீமேக் செய்தார். கடந்த 1987ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. ரஜினி வேடத்தில் எஸ்.வி.சேகரும், ஸ்ரீகாந்த் வேடத்தில் பாண்டியனும் நடித்தனர். எஸ்.வி.சேகரின் மனைவி கேரக்டரில் கோகிலா அவரை டார்ச் செய்து லஞ்சம் வாங்க வைப்பார். கல்லூரியில் பாண்டியன் அடாவடி செய்பவராக இருப்பார். ஆனால் அவர் ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டு நல்லவராக மாறுவார்.

சதுரங்கம் திரைப்படத்தில் ரஜினி, ஸ்ரீகாந்த் அம்மாவாக பண்டரிபாய் நடித்திருப்பார். இந்த கேரக்டரை திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தில் அக்கா கேரக்டராக மாற்றி அதில் கல்பனாவை நடிக்க வைத்தார் விசு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

தோல்வி அடைந்த ஒரு திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்து வெற்றி படமாக்குவதில் விசு வல்லவர். இதேபோல் ‘உறவுக்கு கைகொடுப்போம்’ என்ற ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கிய திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், அதனை மீண்டும் ரீமேக் செய்து விசு வெற்றிப்படமாக்கினார். அந்த படம் தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.