மழலைப் பட்டாளம்: நடிகை லட்சுமி இயக்கிய ஒரே படம்.. உதவிய பாலசந்தர்-விசு..!

பழம்பெரும் நடிகை லட்சுமி பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்திருந்த நிலையில் அவர் இயக்கிய ஒரே ஒரு திரைப்படம் மழலைப் பட்டாளம்.  இந்த படத்திற்கு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மற்றும் விசு ஆகிய இருவரும் உதவி செய்திருந்தனர்.

1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மழலைப் பட்டாளம்’. முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட படம் என்று போஸ்டரை பார்த்தவுடன் புரிந்து கொண்டாலும், ஒரு மெல்லிய காதல் கதையை அழுத்தமாக சொல்லும் படம்தான் இது.

காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!

mazhalai pattalam

1968ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Yours Mine and ours என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதைப்படி நாயகன் ஒரு எழுத்தாளர். அவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் மனைவி இல்லாததால் அவர் குழந்தைகளை வளர்ப்பதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் நாயகி ஒரு ரிஷப்சனிஸ்ட் மற்றும் டெலிபோன் ஆப்பரேட்டராக வேலை பார்க்கிறார். இவருக்கும் 6 குழந்தைகள் உள்ளது. ஆனால் கணவர் இல்லை. இந்த நிலையில் தான் எழுத்தாளரின் பரம ரசிகையாக இருக்கும் நாயகி அடிக்கடி அவருடைய புத்தகங்கள் குறித்து போனில் விமர்சனம் செய்வார். இந்த நிலையில் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணம் ஏற்படும். அவருடனான ஒரு மெல்லிய காதல் ஏற்படும் சமயத்தில் தான் இருவரும் சந்திக்கும் போது ஒரு அதிர்ச்சி ஏற்படும். அந்த அதிர்ச்சி என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இருவரும் ஒருவரை  ஒருவர் காதல் செய்து கொண்டாலும் தங்களுக்கு குழந்தைகள் இருக்கிறது என்பதை இருவருமே சொல்லவில்லை. இதன் பின்னர் அந்த காதல் என்ன ஆனது? அவர்களுடைய 11 குழந்தைகளுக்கு இந்த காதல் தெரிய வருமா? குறிப்பாக ஹீரோயின் உடைய 6 குழந்தைகளில் உள்ள ட்விஸ்ட் என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

சிவாஜி படத்தை இயக்கியவர்.. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.. நடிகை விஜய நிர்மலாவின் சாதனை..!

mazhalai pattalam1

இந்த படத்தின் ஹீரோவாக பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த விடுதலை திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாக சுமித்ரா நடித்திருந்தார். அவரது நடிப்பு கிளாசிக் நடிப்பு என்ற அனைவரும் பாராட்டினர்.

இந்த படத்தின் கலகலப்புக்கு முழு காரணம் 11 குழந்தைகள் தான். ஒவ்வொரு குழந்தையின் குறும்புகள் அனைத்தும் ரசிக்கத்தக்கவை. அதேபோல் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியது. ‘கௌரி மனோகரியை கண்டேன், ஒரு ஆடவன் வடிவத்திலே’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். அதேபோல் ’போற இடம் எங்கப்பா, போனப்புறம் சொல்றேன் பா என்ற பாடலும் அந்த காலத்தில் வானொலியில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடைந்தது.

மொத்தத்தில் ஒரு சில லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் முதல் பாதியில் ஒரு கவித்துவமான காதல் கதையும், இரண்டாவது பாதையில் மழலைகள் கொண்டாடும் குறும்பு காமெடியும் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.

தமிழில் ஐந்தே படங்கள்.. குடும்பத்தோடு விமான விபத்தில் இறந்த பிரபல நடிகை..

இந்த படத்தை லட்சுமி இயக்கியிருந்தாலும் இயக்குனர் மேற்பார்வையாளராக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பணிபுரிந்தார். அதேபோல் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த விசு, இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதினார். அதற்காகவே அவர் தனது வேலையை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுவதுண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...