மாமன்னன் பட வில்லனுடன் கைகோர்க்கும் ரஜினி! தலைவரின் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்!

Published:

ரஜினி தனது 169வது படமான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி ஹிட் அடுத்த நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து படமும் ஆகஸ்ட் 10 தேதி வெளியாக உள்ளது.

மேலும் படத்தில் தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்த மல்டி ஸ்டார் படமாக ஜெயிலர் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்பொழுது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்சனை தொடர்ந்து ரஜினி டி.ஜே.ஞானவேலு இயக்கத்தில் ரஜினிகாந்தின் 170 வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பணிகள் தற்பொழுது முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என ஏற்கனவே இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் தகவல் தற்பொழுது உருவாகியுள்ளது.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் நடிகைக்கு இப்படி ஒரு சம்பவமா? கண்ணீருடன் பகிர்ந்த சில நினைவுகள்!

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் பஹத் மாமன்னன் படத்தில் வில்லனாக களமிறங்கி கலக்கி இருந்தார். அவரின் நடிப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் நடிகர் பஹத் விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் வேட்டையன் என வைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் உங்களுக்காக...