ரஜினியின் சைடு வணக்கம்.. இதுதான் காரணம்.. மீசை ராஜேந்திரன் பகிர்ந்த தகவல்!

Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.

சங்கடத்தில் நெளிந்த ரஜினி.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சிவாஜி!

இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இதில் ஏராளமான படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடும் ஹிட் படங்கள் ஆகும். திரையுலகில் திறமையான நடிப்பாலும் ஸ்டைலாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு வலம் வரும் இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

ரஜினி, விஜயகாந்த் கூட சேர்ந்து நடிச்சும்.. கமலுடன் ஜோடி சேராத நடிகை நதியா.. அவரே சொன்ன காரணம்..

இந்நிலையில் ரஜினி பற்றிய ஒரு தகவலை பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சிவாஜி படப்பிடிப்பு எக்மோரில் நடந்துள்ளது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கட்டிடங்களின் மாடியில் நின்றபடியும் மரங்களில் ஏறி அமர்ந்தபடியும் அங்கங்காக கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ரஜினியை பார்த்து சந்தோஷத்தில் உற்சாகத்துடன் சத்தம் போட்டனர். உடனே ரஜினி அவர்கள் அந்த பக்கம் இந்த பக்கம் என்று சுற்றி சுற்றி வணக்கம் சொல்லியுள்ளார். அதிலும் ரஜினி அவர்கள் முகத்திற்கு நேராக வணக்கம் சொல்ல மாட்டார். முகத்திற்கு இரண்டு பக்கமும் தான் மாறி மாறி வணக்கம் சொல்லுவார்.

ரஜினியின் முதல் சினிமா என்ட்ரி.. அபஸ்வரம் டைட்டில் போட்ட பாலச்சந்தர்.. சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்!

இது பற்றி மீசை ராஜேந்திரன் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேட்டுள்ளார். அப்போது ரஜினி முகத்திற்கு நேராக வணக்கம் வைத்தால் ரசிகர்களால் நம் முகத்தை பார்க்க முடியாது என கூறியுள்ளார். மேலும் அப்படி வணக்கம் சொல்வது தான் ரஜினியின் ஸ்டைல் என்றும் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.