குழுவாக நிதி திரட்டிவரும் ராகவா லாரன்ஸ்!!… ரஜினி கொடுத்த 100 மூட்டை அரிசிகள்…

சினிமாவில் மட்டும் ஹீரோவாக விளங்கும் பல ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத் திகழும் ஒரு நடிகர் ராகவா லாரன்ஸ்தான். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில்…

சினிமாவில் மட்டும் ஹீரோவாக விளங்கும் பல ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத் திகழும் ஒரு நடிகர் ராகவா லாரன்ஸ்தான். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

மனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நபராக இருப்பவர் லாரன்ஸ் அவர்கள்தான். அனைத்து இக்கட்டான சூழ்நிலைகளிலும் உதவும் இவர் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதியுறும்போது உதவி செய்யாமல் இருப்பாரா? இவர் ஏற்கனவே கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு மூன்று கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.

523d0c73dd94f59e9f37f0d8c085f7eb

அத்துடன் மீண்டும் 25 லட்சம் ரூபாய் தூய்மை பணியாளர்களுக்கும், 25 லட்சம் ரூபாய் சென்னை செங்கல்பட்டு வினியோகஸ்தர் சங்கத்திற்கும் அளித்துள்ளார்.  இதுவரை அவர் 3.5 கோடி ரூபாய்க்கு நன்கொடை வழங்கியுள்ள நிலையில், தற்போது அவர் சென்னையில் இயங்கும் இரு அம்மா உணவகங்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ரீலில் மட்டும் அல்லாது ரியலில் ஹீரோவாக இருக்கும் இவர் தற்போது, ஒரு பதிவினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இதுவரை ரூ.4 கோடிக்கும் மேல் நிதி உதவி செய்துள்ளேன், இருப்பினும் தினமும் பசியால் வாடும் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

எனது குடும்பத்தினர்கள், நண்பர்கள் ஒரே ஒரு தனிமனிதனால் இந்த நாட்டில் உள்ள அனைவரின் பசியையும் போக்கிவிட முடியாது,அதனால் குழுவாக அமைத்து உதவி செய்யக் கோரிக்கை விடுத்தனர். இதனால் சூப்பர் ஸ்டார் அவர்களிடம் நேற்று உதவி கேட்டேன்.

அவர் நூறு மூட்டை அரிசியை அனுப்பியுள்ளார். அதேபோல் கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், போன்றோர்களிடம் உதவி கேட்டுள்ளேன், நீங்களும் உங்களால் முடிந்த பணத்தையோ, பொருளையோ வழங்கி உதவலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன