சீனாவில் டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் பலநாடுகளிலும் பரவியுள்ளது, கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் மூன்றாம் கட்டமாக ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை முதல் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, நிலைமை இன்னும் தீவிரம் அடைய ஊரடங்கானது ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்து மூன்றாம் கட்டமாக ஊரடங்கானது மே 4 ஆம் தேதியில் இருந்து மே 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சினிமா படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாததால் ஓய்வில் இருந்துவரும் நடிகர் மற்றும் நடிகைகள் ஏதாவது ஒரு வகையில் பொழுதினைப் போக்கி வருகின்றனர்.
அதுகுறித்த வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர், அந்த வகையில் நடிகை ஹன்சிகா யுடீயூப் சேனல் ஒன்றினை ஆரம்பித்து ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளார்.
அந்தவகையில் தற்போது நடிகை ஹன்சிகா டிக்டாக் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த மான் கராத்தே படத்தில் உள்ள டார்லிங் டம்பக்கு பாடலுக்கு நடனம் ஆடி டிக்டாக் செய்துள்ளார்.
ஹன்சிகாவின் இந்த வீடியோவினைப் பார்த்த ரசிகர்களோ, மேக் இல்லாமல் ஹன்சிகாவினை அடையாளம் தெரியவில்லை என்பதுபோல் கிண்டலடித்து வருகின்றனர்.