பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் எப்போது? லைகா வெளியிட்ட சூப்பர் வீடியோ!

Published:

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படம் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சற்று முன் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெளியான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோவில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் ,ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல காட்சிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

மேலும் உங்களுக்காக...