மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட போது திரைத்துறை மட்டுமின்றி தமிழகமே பரபரப்பானது. இனி எம்.ஜி.ஆரின் வருங்காலம் எப்படி இருக்கும் என ஆளுக்கொரு பேச்சு பேச ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து சினிமாவும் அடி வாங்க ஆரம்பித்தது. ஆனால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற ஆண்டான 1967 ஜனவரி 12க்கு மறுநாள் எம்.ஜி.ஆரின் தாய்க்குத் தலைமகன் படம் பொங்கல் ரிலீஸாக வெளியாக வேண்டிய நேரம்.
தமிழகமே பரபரப்பாக இந்தப் படம் வெளியாகுமா என்று எண்ணிய நிலையில் திட்டமிட்டபடி படம் வெளிவந்து வழக்கம் போல் ஹிட் வரிசையில் சேர்ந்தது.
ஆனால் எம்.ஜி.ஆரை எம்.ஆர். ராதா சுட்டவுடன் தானும் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயல இருவரும் இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிர் பிழைத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். தாக்கப்பட்ட நிகழ்வால் ஏற்பட்ட பதற்றமும் உணர்ச்சிக்கொந்தளிப்பும் அடங்கவில்லை.
இவ்வாறு எம்.ஜி.ஆர். குண்டடிபட்டு குரல் பாதிக்கப்பட்டடு சிகிச்சையில் இருக்க, இன்னொரு பக்கம் இந்தக் வழக்கும் நடந்துகொண்டிருந்தது. இதனால் தமிழகத்தில் நிலவிய பதற்றம் திரையுலகையும் தொற்றிக்கொண்டது. எந்தப் புதுப்படமும் வெளியாகவில்லை. இப்பேற்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தமிழ் சினிமா தனது இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்த படம் தான் பட்டணத்தில் பூதம்.
1967 ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ் உள்ளிட்டோருடன் பூதமாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர். இந்தப் படம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது பூதம். இப்படத்தினைத் தயாரித்த வீனஸ் பிக்சர்ஸ் பெரிய லாபம் அடைந்தது.
யாரு சாமி நீ..? எங்கிருந்து வந்த.. இப்படி ஒரு தங்கமனசுக்காராரா? KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்து!
அதுவரை சினிமாவில் கதை, வசனகர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், இயக்குநராக உருவெடுக்க முக்கியக் காரணமாக இருந்த நிறுவனம்தான் வீனஸ் பிக்ஸர்ஸ். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் பிரிந்து சென்று தனது சோதனை முயற்சிகளுக்காக ‘சித்ராலயா’ தொடங்கிய பிறகு, வீனஸ் பிக்ஸர்ஸ் தயாரித்த படம்தான் ‘பட்டணத்தில் பூதம்’.
மக்களுக்கு எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும் வண்ணம் ‘பட்டணத்தில் பூதம்’ படத்துக்கான திரைக்கதை, வசனத்தை எழுதிக் கொடுத்ததோடு அந்தப் படத்தில் பூதமாகவும் நடித்து அசத்தினார் ‘ஜாவர்’ சீதாராமன்.
சென்டிமெண்ட், குடும்பக் கதைகளுக்குத் தமிழ் சினிமா மாறிய காலகட்டத்தில் நுழைந்து, ஹாலிவுட்டில் தயாராகி 1963-ல் சென்னை மகாணம் உட்பட உலகெங்கும் வெளியாகி சக்கைபோடு போட்ட ‘பிராஸ் பாட்டில்’ என்ற ஆங்கிலப் படத்தை தழுவியே ‘பட்டணத்தில் பூதம்’ திரைக்கதையை எழுதினார் சீதாராமன்.
காதல், கள்ளக் கடத்தல், 3000 ஆண்டுகள் ஜாடியில் அடைப்பட்டுக் கிடந்த பூதம் விடுவிக்கப்படுதல், காதலுக்கு பூதம் உதவுதல், வானில் பறந்து செல்லும் கார், விறுவிறுப்பான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி, தமிழ் சினிமாவின் முதல் ஹெலிஹாப்டர் துரத்தல் காட்சி என ரசிகர்களுக்குப் படம் முழுவதும் ஆச்சரியங்கள் வந்து கொண்டேயிருந்தன.
இந்தப் படத்தின் மூலமாக எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா பிரச்சினை சற்று ஆறி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி தியேட்டருக்கு வர மீண்டும் சினிமா உயிர் பெற ஆரம்பித்தது.