தமிழ் சினிமாவில் எண்ணற்ற காமெடி நடிகர்கள் இருந்தாலும் என்.எஸ்.கே, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகிபாபு என சிலரைத்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் தான் இணை உலகிலும். எத்தனையோ பேர் பிராங்க் வீடியோ, காமெடி வீடியோ என தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவேற்றினாலும் இவர்கள் போல் வித்தியாசமாக காமெடி செய்து இணைய உலகத்தையே தங்கள் பக்கம் மாற்றி வைத்திருக்கின்றனர் கோபி-சுதாகர் என்ற பரிதாபங்கள் யூடியூப் சேனல் நண்பர்கள்.
சென்னை வந்து ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் வெளியேற்றப்பட்டவர்கள் அதன்பின் தாங்களாகவே யூடியூப் சேனல் ஆரம்பித்து இன்று இணைய உலகிலும்,மீம்ஸ் உலகிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர் கோபி-சுதாதகர் நண்பர்கள்.
வாய்ப்புகளைத் தேடி சோர்ந்து போய் சொந்த ஊருக்கே போகலாம் என முடிவெடுத்து கோயம்பேட்டில் பஸ் ஏறச் சென்றவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டவர்கள் இரு அடையாளம் தெரியாத மனிதர்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஸ்டேண்ட் அப் காமெடியில் ஜொலிக்காமல் போனவர்கள் பின் அங்கிருந்து வெளியேறி மேலும் சில தொலைக்காட்சிகளில் வாய்ப்புத் தேடியிருக்கின்றனர்.
அங்கும் நிராகரிக்கப்பட மனம் நொந்து சொந்த ஊர் திரும்பலாம் என பேருந்து நிலையம் செல்ல காத்திருக்கும் போது இவர்களை ஒரு காமெடி ஷோவில் பார்த்த ஒரு ரசிகை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வாழ்த்திவிட்டு சென்றிருக்கிறார்.
இது அவர்களுக்கு உத்வேகம் கொடுக்க மேலும் சில நாட்கள் தங்கி முயற்சி செய்யலாம் என எண்ணி மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வேலைக்குச் சேர்ந்திருக்கின்றனர். அங்கே இவர்களது திறமையைக் காட்ட இருவருக்கும் ரசிகர்கள் கூடினர். இவர்களது அனைத்து காமெடிகளும் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை வைத்தே கலாய்க்கப்படுவதால் பலருக்கு மன ஆறுதலாக இருந்தது.
அடேங்கப்பா!.. அனுஷ்காவுக்கு திருமணமா?.. அந்த தயாரிப்பாளரை கல்யாணம் பண்ணப் போறாரா?.. வைரலாகும் தகவல்!
அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் இருந்து விலகி தனியாக பரிதாபங்கள் சேனலை ஆரம்பிக்க வெளி உலகம் தெரிய ஆரம்பித்தனர். இவர்களது பேங்க் காமெடி, சொந்த ஊர் பரிதாபங்கள், தீபாவளி பரிதாபங்கள், தலைவர்களை கலாய்ப்பது, ரயில் பயணம் பரிதாபங்கள் போன்றவை பெருமளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து மீம்ஸ்களிலும் வர ஆரம்பித்தனர். மேலும் இவர்களது வீடியோக்கள் ட்ரோல் செய்பவர்களுக்கும் பெரிதும் உதவ சோஷியல் மீடியாக்களில் இன்று இவர்கள் இல்லாத மீம்ஸ்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. வடிவேலு சினிமாவில் தனது ராஜ்ஜியத்தை நடத்தினார்.
மீம்ஸ்களிலும் இன்றும் வலம் வருகிறார். அதேபோல் கோபியும், சுதாகரும் இணைய உலகின் காமெடி ராஜாங்கத்தையே நடத்திவருகின்றனர். இவரது வீடியோவைப் பார்த்து தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர் மனம் மாறி அந்த எண்ணத்தை விடுத்தாக ஒரு பேட்டியில் கோபி கூறியிருக்கிறார். இந்த இரண்டு நபர்களும் தான் எங்களுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்ததாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள்.