விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நிமிடத்தையும் வீணாக்குவதில்லை என்றும் எப்போதும் கண்டெண்ட் குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பொறுப்பான மருமகளாக நடித்துக் கொண்டிருக்கும் ஹேமாவுக்கு, ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஒரு பக்கம் சீரியல் மூலம் வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இன்னொரு பக்கம் விளம்பரப் பட வாய்ப்புகள், கடைத் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருமானத்தை பெருக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவரை அடிக்கடி டிவி விளம்பரங்களிலும் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமின்றி, தன்னுடைய யூடியூப் சேனலுக்கு கண்டெண்ட் தயாரிப்பதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவேளைகளில் கூட, உட்கார்ந்து ஒரு கண்டெண்ட் தயார் செய்து, அதை எப்படி வீடியோவாக மாற்றலாம் என்று யோசித்து குறிப்புகள் எழுதிக் கொள்வாராம். அதன் பிறகு வீட்டிற்கு வந்து உடனே அந்த கண்டெண்ட்டை வீடியோவாக உருவாக்கி அப்லோடு செய்து விடுகிறார்.
தற்போது, அவரது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கையில் ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல், எப்போதும் கண்டெண்ட் என்ற யோசனையிலேயே அவர் இருப்பதால் யூடியூப் மூலம் வருமானமும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.