பிறந்த 41வது நாளில் நடிக்க வந்தவர்… 40 வயதில் இன்றும் பிரபலம்.. சுஜிதாவின் திரை பயணம்..!!

பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர்கள் மூன்று அல்லது நான்கு வயதில் இருந்து நடிக்க ஆரம்பிப்பார்கள் என்பது தெரிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் பேபி ஷாம்லி 3 வயதில் நடித்தார். அந்த வயதில்…

sujitha

பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர்கள் மூன்று அல்லது நான்கு வயதில் இருந்து நடிக்க ஆரம்பிப்பார்கள் என்பது தெரிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் பேபி ஷாம்லி 3 வயதில் நடித்தார். அந்த வயதில் அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க மணிரத்னம் படாத பாடுபட்டதாக கூறப்படுவதுண்டு.

ஆனால் பிறந்து 41 நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தது மட்டுமின்றி இன்று வரை பிரபலமான ஒரு நடிகை இருக்கின்றார் என்றால் அவர் தான் சுஜிதா.

சிவாஜியுடன் 5 கேரக்டரில் நடித்த ஒரே நடிகை.. யார் இந்த விஜயகுமாரி…?

தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் குறிப்பாக விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ஆகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்பட பல தொலைக்காட்சி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை சுஜிதா. இவர் முதல் முறையாக அப்பாஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் நடிக்கும் போது பிறந்து 41 நாட்களே ஆகியிருந்தது. இந்த படத்தில் கேஆர் விஜயாவுக்கு பேத்தியாக அவர் நடித்திருப்பார்.

அதேபோல் பாக்யராஜ் இயக்கி, நடித்த ’முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் பாக்யராஜ் குழந்தையாக வரும் நட்சத்திரமும் சுஜிதா தான். இந்த படத்தில் ஊர்வசி, குழந்தை சுஜிதாவை பொய் காரணத்திற்காக தாண்ட வேண்டும் என்ற காட்சி இருந்தது. இந்த காட்சியில் உண்மையிலேயே குழந்தையை படுக்க வைத்து ஊர்வசி தாண்டியதாகவும் இதன் பிறகு குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவரது பெற்றோர்கள் சில பரிகாரங்ககள் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் சுஜிதா, குழந்தை நட்சத்திரமாக சில படங்கள் நடித்தார். அதன் பிறகு இவர் ஹீரோக்களின் தங்கையாகவும் மகளாகவும் சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சுஹாசினி நடிகையான கதை… நெஞ்சத்தை கிள்ளாதே சுவாரஸ்யங்கள்!

திரை உலகை விட அவர் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானார். முதல் முறையாக அவர் தூர்தர்ஷனில் வெளியான ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற தொடரில் நடித்தார். அதன் பிறகு ராஜ் டிவியில் ‘கங்கா யமுனா சரஸ்வதி’ என்ற சீரியலில் நடித்தார். ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. சன் டிவி சீரியல்களுக்கு நிகராக இந்த சீரியல் பிரபலமாகி சூப்பர் ஹிட்டானது.

97599859

அதன் பிறகு விஜய் டிவியில் ‘உருவங்கள்’, சன் டிவியில் ‘பூக்காலம்’ உள்பட பல சீரியல்களில் நடித்த அவர் தற்போது விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஐந்து சகோதரர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் மூத்த அண்ணனுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

பிறந்த 41வது நாளில் நடிக்க தொடங்கி 40 வயதை தாண்டியும் அவர் தொடர்ச்சியாக சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்து வருகிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணிபுரிந்துள்ளார். விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் மலையாள டப்பிங்கில் அப்படத்தில் ஹிரோயினாக நடித்த மாளவிகா மோகனனுக்கு பின்னணி குரல் கொடுத்தது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.