பாதி படப்பிடிப்பில் மறைந்த பீம்சிங்.. லட்சுமியின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் கதை..!!

Published:

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவல் திரைப்படம் ஆனது. இந்த படத்தை பீம்சிங் இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து மீண்டும் ஜெயகாந்தன் மற்றும் பீம்சிங் இணைந்த படம் தான் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். இந்த படத்தை பீம்சிங் இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென காலமாகிவிட்டதை அடுத்து வேறு ஒருவர் இயக்கியதாகவும் கூறப்பட்டது.

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படம் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வெளியானது. லட்சுமி முக்கிய கேரக்டரில் நடிக்க ஸ்ரீகாந்த் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சீனிவாசன், சுகுமாரி, காந்திமதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படத்தில் இரண்டே பாடல்கள் தான் உண்டு. அந்த இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

மழலைப் பட்டாளம்: நடிகை லட்சுமி இயக்கிய ஒரே படம்.. உதவிய பாலசந்தர்-விசு..!

oru nadigai2 1

இந்த படத்தின் கதை என்று பார்த்தால் லட்சுமி ஒரு நாடக நடிகையாக இருப்பார். அவருக்கு உறுதுணையாக ஓய் ஜி பார்த்தசாரதி இருப்பார். இந்த நிலையில் தான் லட்சுமி நாடகங்களை ஸ்ரீகாந்த், தான் வேலை செய்யும் பத்திரிகைக்காக விமர்சனம் செய்வார். அவர் கடுமையாக விமர்சனம் செய்வது லட்சுமிக்கு வருத்தமாக இருக்கும்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த்தை நேரில் சந்திக்க வேண்டும் என்று லட்சுமி விரும்புவார். தன்னுடைய பத்திரிகைக்கு பேட்டி அளிப்பதாக இருந்தால் நேரில் சந்திக்கிறேன் என ஸ்ரீகாந்த் சொல்வார். இருவரது சந்திப்பு நடக்கும். அப்போது தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குவார்கள்.

ஸ்ரீகாந்த் ஏற்கனவே தனக்கு திருமணமாகி குழந்தை உள்ளது என்றும் ஆனால் மனைவி இறந்து விட்டதால் தன்னுடைய மாமனார் வீட்டில் குழந்தை வளர்கிறது என்றும் சொல்வார். இதனை லட்சுமி ஏற்றுக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவருடைய மனைவியின் தங்கை ஆசையுடன் இருக்க அவருக்கு ஏமாற்றமாக இருக்கும். இந்நிலையில் ஸ்ரீகாந்த்- லட்சுமி திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது தான் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.

ரஜினி ஹீரோவாக நடித்த படம்.. ஆனால் டைட்டிலில் வில்லன் பெயர் தான் முதலில்.. எப்படி ஒப்புக்கொண்டார்?

oru nadigai1

பத்திரிகையில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்தை விட நடிகையாக லட்சுமி மிக அதிகமாக சம்பாதிப்பார். தன்னுடைய வருமானத்தில் தான் லட்சுமி வாழவேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் ஸ்ரீகாந்த், நாடகத்தில் நடிப்பதை நிறுத்திவிடுமாறு கூறுவார். ஆனால் உயிரை விட வேண்டுமானால் கூட விட தயாராக இருக்கிறேன், நடிப்பை விட முடியாது என்று லட்சுமி கூறுவார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து விவாகரத்து வரை செல்லும். வழக்கறிஞர் நாகேஷிடம் விவாகரத்து பெற்று தர  செல்வார்கள்.

அப்போது நாகேஷ், கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு வைத்து விவாகரத்து பெற முடியாது என்றும் யாராவது ஒருவருக்கு உடல் ஊனமுற்றால் மட்டுமே விவாகரத்து பெற முடியும் என்றும் கூறுவார். மேலும் விவாகரத்து என்பது மிகப்பெரிய முடிவு, நீங்கள் இருவரும் பேசி ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்றும் அறிவுரை கூறுவார்

இந்த நிலையில் தான் திடீரென லட்சுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்படும் இரண்டு கால்களும் செயல்படாமல் போய்விடும். அப்போது தனது மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை நன்றாக ஸ்ரீகாந்த் கவனித்துக் கொள்வார். அப்போது அங்கு வரும் நாகேஷ், இப்போது ஒருவருக்கு உடல் நல கோளாறு இருப்பதால் தாராளமாக விவாகரத்து வாங்கி விடலாம் என்று கூறுவார்.

ஆனால் ஸ்ரீகாந்த் அதற்கு மறுப்பு தெரிவித்து தனது மனைவிக்கு சேவை செய்யவே தான் விரும்புகிறேன் என்று கூறுவார். நாகேஷ் மகிழ்ச்சி அடைந்தாலும் ஏமாற்றத்தை வெளிக்காட்டுவது போல் காட்டிக்கொண்டு அவர் வெளியேறி விடுவார். அதன் பிறகு லட்சுமிக்கு உறுதுணையாக ஸ்ரீகாந்த் இருப்பார். லட்சுமி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவருமே கேரக்டர்களாக வாழ்ந்திருப்பார்கள்.

ரஜினி நடித்த கேரக்டரில் எஸ்.வி.சேகர்.. துணிச்சலாக ரீமேக் செய்த விசு..!

குறிப்பாக லட்சுமிக்கு இந்த படத்தில் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இந்த படம் வசூல் அளவில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக இந்த படம் இருந்தது.

மேலும் உங்களுக்காக...