லைப்ல இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஸ்ருதி ஹாசன் பேட்டி!!

By Staff

Published:

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதி ஹாசன். தந்தை புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும், தனக்கான சினிமாப் பயணத்தை சிபாரிசு இல்லாமல் தானே அமைத்துக் கொண்டார் ஸ்ருதி ஹாசன்.

4a01874a84a2008fb4be6d6441d2b893

இவர் ஹே ராம் என்னும் இந்தி படத்தில் 2000 ஆம் ஆண்டில் கால் பதித்து இருந்தாலும், தமிழில் இவர் 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின்னர் 3, பூஜை, புலி, வேதாளம் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலே அதிக அளவில் ஜொலித்த ஸ்ருதிஹாசன் படத்தினைவிட பாட்டுப் பாடுதல், இசையமைத்தல் போன்றவற்றிலே ஆர்வம் கொண்டவர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார்.

View this post on Instagram

???????????? good vibes only

A post shared by @ shrutzhaasan on

தற்போது இன்ஸ்டாகிராமில் கருத்துச் சொல்லும் ஒரு வீடியோவினைப் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்று வருகிறார். அதாவது அந்த வீடியோவில், காந்திஜியின் மூன்று குரங்கு பொம்மைபோல கண், காது மற்றும் வாயினைப் பொத்திக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்குக் கீழே, “மூனையும் மனசுல வச்சிக்கிட்டு, அமைதியை கடைபிடிக்கணும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment