சினிமாவில் எனக்கு பெயர் வச்சது இந்த இயக்குனர் தான்… மனம் திறந்த நெப்போலியன்…

நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்…

nepolean

நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன்.

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நெப்போலியன். 1990 காலகட்டத்தில் பிரபலமான வில்லன் நடிகராக புகழின் உச்சியில் இருந்தார் நெப்போலியன். சின்னதாயி, ஊர் மரியாதை, முதல் சீதனம், தலைவாசல், புது பிறவி, மின்மினி பூச்சிகள், எங்க முதலாளி, கிழக்கு சீமையிலே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நெப்போலியன்.

1994 ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் நெப்போலியன். தொடர்ந்து ராஜ முத்திரை, என் பொண்டாட்டி நல்லவள், ஆகாய பூக்கள், எட்டுப்பட்டி ராசா, சுயம்வரம், கரிசக்காட்டு பூவே, மனுநீதி, தென்காசி பட்டணம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் நெப்போலியன்.

அதற்குப் பிறகு அமெரிக்காவில் சென்று செட்டிலான நெப்போலியன் அவ்வப்போது நேக்காணல்களில் கலந்து கொள்வார். அப்படி ஒரு நேர்காணலில் சினிமாவில் தனக்கு பெயர் வைத்தது யார் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், பாரதிராஜா சார் தான் புதுசா வர்றவங்க எல்லாத்துக்கும் சினிமால பேர் வைப்பாரு. அப்படி எனக்கு பேர் வைக்கிறதுக்கு ஒரு 25 பேர் எழுதிட்டு வா அதுல நான் செலக்ட் பண்ணி சொல்றேன் அப்படின்னு சொன்னாரு. நான் எழுதிட்டு போய் கொடுத்தேன் எந்த பேருமே உனக்கு செட் ஆகலையே உன் உருவத்துக்கு ஏத்த மாதிரி பெயர் வைக்கணும் அப்படின்னு சொல்லிட்டு எனக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்தது பாரதிராஜா சார் தான் என்று பகிர்ந்திருக்கிறார் நெப்போலியன்.