அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வத் மாரிமுத்து.
ஓ மை கடவுளை திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருந்ததால் முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஓரி தேவுடா என்ற பெயரில் தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்தார்.
தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கி அது திரையரங்குகளில் வெளியாகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத விதமாக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட Dragon திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் மிகவும் குறைந்த பட்ஜெட் ஆன 35 கோடியில் எடுக்கப்பட்ட Dragon திரைப்படம் 150 கோடியை நெருங்கி வசூல் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. கதைக்களம் நன்றாக இருந்தால் மக்கள் எந்த ஒரு படத்தையும் வெற்றி பெற செய்வார்கள் என்பதற்கு Dragon படம் பெரிய உதாரணமாக இருக்கிறது. இப்போது Dragon திரைப்படத்தின் OTT ரிலீஸ் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் வருகிற மார்ச் 21ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் Dragon திரைப்படம் வெளியாக இருக்கிறது.