3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

By Bala Siva

Published:

மூன்றே மூன்று முக்கிய கேரக்டர்கள் மற்றும் சில சின்ன சின்ன கேரக்டர்களை வைத்து இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ’நெஞ்சில் ஒரு ஆலயம்’ என்ற திரைப்படம் கடந்த 1962 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பட்ஜெட்டை விட சுமார் பத்து மடங்கிற்கும் அதிகமாக சம்பாதித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கல்யாணகுமார், தேவிகா மற்றும் முத்துராமன் ஆகிய மூன்று கேரக்டர் தான் இந்த படத்தின் 90 சதவீத காட்சிகளில் வருவார்கள். நாகேஷ், மனோரமா, வி எஸ் ராகவன், குட்டி பத்மினி ஆகியோர் சின்ன சின்ன கேரக்டரிலும் சாந்தகுமாரி சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார்கள்.

எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக சம்பளம்.. தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரி..!

nenjil ore alayam3

கல்யாண் குமார் மற்றும் தேவிகா இருவரும் காதலித்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்யாண்குமாரை திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை தேவிகாவுக்கு ஏற்படும். அதன் பிறகு அவர் பெற்றோர் பார்த்த முத்துராமனை திருமணம் செய்து கொள்வார்.

இந்த நிலையில் திடீரென முத்துராமனுக்கு புற்றுநோய் வர அவர் மருத்துவமனைக்கு சென்றபோது தான் அந்த மருத்துவமனையின் தலைமை டாக்டர் கல்யாண் குமார் என்பது தெரியவரும். இந்த நிலையில் முந்தைய காதல் கதைகள், முந்தைய காதல் ஞாபகங்கள் கல்யாண் குமார் மற்றும் தேவிகாவுக்கு வர ஒரு கட்டத்தில் தேவிகாவை விரும்புவதாக கல்யாண் குமார் சொல்வது போன்று தோன்றும்.

nenjil ore alayam2

ஆனால் தேவிகா தனது கணவரை காப்பாற்றும் கடமையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன் என்றும் நீங்கள் தான் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் முந்தைய காதலை மனதில் வைத்து என்னுடைய கணவரை காப்பாற்றாமல் இருந்துவிட வேண்டாம் என்றும் கெஞ்சுவார். இந்த நிலையில் கல்யாண்குமார் – தேவிகா காதல் முத்துராமனுக்கு தெரிய வர, ஒருவேளை ஆபரேஷன் வெற்றி பெறாமல் நான் இறந்து விட்டால், நீ கல்யாண்குமாரை மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தேவிகாவிடம் சத்தியம் கேட்பார்.

இந்தியாவில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜியை தூக்கி சாப்பிட்ட எஸ்.எஸ்.ஆர்..!

ஒரு கட்டத்தில் முத்துராமனின் உயிருக்கே ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது அவருக்கு கல்யாண் குமார் உடனே ஆபரேஷன் செய்வார். ஆபரேஷன் முடிந்ததும் நடந்த திருப்பம் தான் பார்வையாளர்கள் யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு இப்படி ஒரு முக்கோண காதல் கதையை இவ்வளவு டீசண்டாக ஸ்ரீதர் தவிர வேறு யாராலும் எடுத்து இருக்க முடியாது. இந்த திரைப்படம் நடந்த 1962 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகி 175 நாள் ஓடியது.

nenjil ore alayam1

இந்த படத்திற்கு வசூல் குவிந்தது. எம்ஜிஆர், சிவாஜி படத்துக்கு கூட இல்லாத வசூல் கிடைத்தது. இந்த படத்தின் பட்ஜெட்டை விட 10 மடங்கு தமிழில் மட்டும் வசூல் செய்தது என்பது மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. அதன் மூலம் ஏராளமான வருவாய் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்தது. மேலும் தமிழில் சிறந்த படம் என்று தேசிய விருதையும் பெற்றது.

கணவரை விட அதிக சொத்து வைத்திருக்கும் காஜல் அகர்வால்.. ஆண்டு வருமானம் இத்தனை கோடியா?

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘முத்தான முத்தல்லவோ, ‘சொன்னது நீதானா, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’, ‘என்ன நினைத்து என்னை’ போன்ற தேன் சொட்டும் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...